ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் கடையை அடைத்து ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் கடையை அடைத்து ஆர்ப்பாட்டம்

Added : அக் 06, 2021
Share
பனமரத்துப்பட்டி: படுகொலை செய்யப்பட்ட விற்பனையாளர் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி, டாஸ்மாக் கடைகளை அடைத்து, பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் துளசிதாஸ்,45, ராமு,46, ஆகியோரை பணம் பறிக்கும் நோக்கில், சமூக விரோதிகள், நேற்று, முன்தினம் தாக்கினர். அதில், துளசிதாஸ் உயிரிழந்தார்.

பனமரத்துப்பட்டி: படுகொலை செய்யப்பட்ட விற்பனையாளர் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி, டாஸ்மாக் கடைகளை அடைத்து, பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் துளசிதாஸ்,45, ராமு,46, ஆகியோரை பணம் பறிக்கும் நோக்கில், சமூக விரோதிகள், நேற்று, முன்தினம் தாக்கினர். அதில், துளசிதாஸ் உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து, சேலம் மாவட்டத்தில், 220 டாஸ்மாக் கடைகளை திறக்காமல், நேற்று, டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திறந்த கடைகளையும் சிறிது நேரத்தில், அடைத்தனர். சந்தியூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன், டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் திரண்டனர். படுகொலை செய்யப்பட்ட விற்பனையாளர் துளசிதாஸ் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி, அவரது குடும்பத்தில், ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜாவை சந்தித்து, கோரிக்கை வலியுறுத்தி, மனு அளித்தனர். அண்ணா தொழிற்சங்க செயலர் கஜேந்திரன், தொ.மு.ச., தலைவர் ஜம்பு, பொருளாளர் மாணிக்கம், செயலர் முத்துசாமி உள்ளிட்ட அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மதியம் 1:00 மணிக்கு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜா கூறுகையில், ''கடைக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரணம் வழங்க கோரி அளித்த மனு, எம்.டி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X