பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநில பெரிய வெங்காயம் வரத்து சரிவு: ஒரே நாளில் ரூ.15 வரை விலை உயர்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
சேலம்: வடமாநிலங்களில் பெய்யும் மழையால் பெரிய வெங்காயம் வரத்தில் சரிவு ஏற்பட்டதால், நேற்று ஒரே நாளில் விலை, கிலோவுக்கு, 15 ரூபாய் வரை உயர்ந்தது. அதே நேரத்தில், சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிப்பால், விலை சரிவு ஏற்பட்டுள்ளது.சென்னை - கோயம்பேடு, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், சேலம் - தலைவாசல், மதுரை - மாட்டுத்தாவணி, நெல்லை - நயினார்குளத்தான் கரை, நாகர்கோவில் - வடசேரி

சேலம்: வடமாநிலங்களில் பெய்யும் மழையால் பெரிய வெங்காயம் வரத்தில் சரிவு ஏற்பட்டதால், நேற்று ஒரே நாளில் விலை, கிலோவுக்கு, 15 ரூபாய் வரை உயர்ந்தது. அதே நேரத்தில், சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிப்பால், விலை சரிவு ஏற்பட்டுள்ளது.


சென்னை - கோயம்பேடு, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், சேலம் - தலைவாசல், மதுரை - மாட்டுத்தாவணி, நெல்லை - நயினார்குளத்தான் கரை, நாகர்கோவில் - வடசேரி காய்கறி மார்க்கெட்டுக்கள், முக்கிய நகரங்களில் உள்ள, 179 உழவர்சந்தைகளுக்கு, தேவையான பெரிய வெங்காயம் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக், பூனே, சோலாப்பூர், கர்நாடகா மாநிலம் மைசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. வடமாநிலங்களில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் பருவ மழை கொட்டுகிறது. வெங்காய அறுவடையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மார்க்கெட்டுகளுக்கு கடந்த மாதம் வரை, தினமும் சராசரியாக, 250 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த பெரிய வெங்காயத்தின் வரத்து, நேற்று, 100 லாரிகளாக சரிந்தது. வெங்காய விலை, கிலோவுக்கு, 12 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை நேற்று ஒரே நாளில் உயர்ந்தது. உழவர்சந்தைகளில் கடந்த மாதம் வரை பெரிய வெங்காயம் முதல் ரகம் கிலோ, 30 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 42 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 28 ரூபாய்க்கு விற்றது, 40 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 25 ரூபாய்க்கு விற்றது, 36 ரூபாயாக உயர்ந்தது. வெளி மார்க்கெட்டில், முதல் ரகம் கிலோ, 35 ரூபாய்க்கு விற்றது, 50 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 30 ரூபாய்க்கு விற்றது, 45 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 28 ரூபாய்க்கு விற்றது, 38 ரூபாயாக விலை உயர்ந்தது.

தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் நடப்பாண்டு அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிந்துள்ளது. கடந்த மாதம் உழவர்சந்தைகளில் சின்ன வெங்காயம் முதல் ரகம் கிலோ, 24 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 22 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் கிலோ, 20 ரூபாய்க்கு விற்றது, 18 ரூபாயாக சரிந்துள்ளது. வெளி மார்க்கெட்டில் முதல் ரகம் கிலோ, 30 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 25 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் கிலோ, 25 ரூபாய்க்கு விற்றது, 20 ரூபாயாக சரிந்துள்ளது. செவ்வாய்ப்பேட்டை வெங்காய வியாபாரி குமார் கூறியதாவது: வடமாநிலங்களில் பெய்யும் மழையால் பெரிய வெங்காயம் வரத்து சரிந்து அதன் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், கோவை, நாமக்கல், திருச்சி, துறையூர், சேலம் ஆகிய இடங்களில் சின்ன வெங்காயம் விளைச்சல் பல மடங்கு அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. சின்னவெங்காயத்தின் விளைச்சல் அதிகரிப்பு, நடப்பாண்டு பெரிய வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X