பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டை விலைபேசி எங்களை சிறுமைப்படுத்தாதீர்: மக்கள் எதிர்ப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே, 'ஓட்டை விலைபேசி எங்களை சிறுமைப்படுத்தாதீர்கள்' என, மலை கிராம மக்கள் துண்டு பிரசுரம் ஒட்டியுள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே நந்தியாலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் மலை கிராமத்தில், 250 பேர் வசிக்கின்றனர். இங்கு, 150 ஓட்டுகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர், இவர்களிடம், 500 முதல், 1,000 ரூபாயை

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே, 'ஓட்டை விலைபேசி எங்களை சிறுமைப்படுத்தாதீர்கள்' என, மலை கிராம மக்கள் துண்டு பிரசுரம் ஒட்டியுள்ளனர்.


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே நந்தியாலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் மலை கிராமத்தில், 250 பேர் வசிக்கின்றனர். இங்கு, 150 ஓட்டுகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர், இவர்களிடம், 500 முதல், 1,000 ரூபாயை நேற்று முன்தினம் கொடுத்து தங்களுக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டனர். பணம் வாங்காமல், அவர்களை மக்கள் விரட்டியடித்தனர். இதனால் மீண்டும் அவர்கள் வருவதாக கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து, அவர்கள் வரும் வழியில் உள்ள சுவற்றில், நேற்று அப்பகுதி மக்கள் துண்டும் பிரசுரம் ஒட்டியுள்ளனர். அதில், வாக்காளர்கள் அனைவரும் ஒற்றுமையாக பணமோ, பொருளோ பெறாமல் வாக்களிப்பது என, முடிவு எடுத்துள்ளோம். தயவு கூர்ந்து ஓட்டை விலைபேசி எங்களை சிறுமைப்படுத்தாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X