பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க., வேட்பாளரிடம் ரூ.1.33 லட்சம் பறிமுதல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த, அ.தி.மு.க., வேட்பாளரிடமிருந்து, 1.33 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில், ஆறாவது வார்டு ஒன்றிய குழுவை சேர்ந்த, அ.தி.மு.க., வேட்பாளர்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த, அ.தி.மு.க., வேட்பாளரிடமிருந்து, 1.33 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில், ஆறாவது வார்டு ஒன்றிய குழுவை சேர்ந்த, அ.தி.மு.க., வேட்பாளர் விநாயகம் பழையனூர் பகுதியில் நேற்று வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. திமிரி ஒன்றியம் தேர்தல் நடத்தும் அதிகாரி வெங்கடாசலம் தலைமையில், பறக்கும் படையினர் அங்கு சென்ற போது, விநாயகம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரை பிடித்து அவர் பையில் வைத்திருந்த, ஒரு லட்சத்து, 33 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, ஆற்காடு அரசு கருவூலத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். திமிரி போலீசார், விநாயகம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X