சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது கார் மோதி இரண்டு பேர் பலி

Added : அக் 06, 2021
Share
Advertisement
செய்யாறு: செய்யாறு அருகே, பைக் மீது கார் மோதியதில், இருவர் பலியாயினர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல் கஞ்சான்குழி கிராமத்தை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன், 32, சமையல் மாஸ்டர். இவர் மனைவி தாட்சாயணி, 27. இவர்களுக்கு ஜீவா, 7, சபரிவாசன், 5, என்ற இரு மகன்கள், ஷாலினி, 3, என்ற மகள் உள்ளனர். இதில், ஜீவாவிற்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால், கேக் வாங்கி வர கோட்டீஸ்வரன்,

செய்யாறு: செய்யாறு அருகே, பைக் மீது கார் மோதியதில், இருவர் பலியாயினர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல் கஞ்சான்குழி கிராமத்தை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன், 32, சமையல் மாஸ்டர். இவர் மனைவி தாட்சாயணி, 27. இவர்களுக்கு ஜீவா, 7, சபரிவாசன், 5, என்ற இரு மகன்கள், ஷாலினி, 3, என்ற மகள் உள்ளனர். இதில், ஜீவாவிற்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால், கேக் வாங்கி வர கோட்டீஸ்வரன், அப்பகுதியை சேர்ந்த அருண், 21, லோகேஸ்வரன், 20, ஆகிய இருவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை, ஹீரோ ?ஹாண்டா பைக்கில் சென்றனர். வெம்பாக்கத்தில் கேக் வாங்கி கொண்டு, மீண்டும் வீடு திரும்பினார். பைக்கை அருண் ஓட்டி சென்றார். உமையாள்புரம் கூட்ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்ததில், கோட்டீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். லோகேஸ்வரன், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று அதிகாலை உயிரிழந்தார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அருண் சேர்க்கப்பட்டுள்ளார். பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X