கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை: புதுச்சேரியில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வாபஸ் பெறவும், புதிதாக வெளியிடவும், அம்மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், 'புதுச்சேரி நகராட்சியில், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிக


சென்னை: புதுச்சேரியில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வாபஸ் பெறவும், புதிதாக வெளியிடவும், அம்மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், 'புதுச்சேரி நகராட்சியில், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் உள்ள வார்டுகளை ஒதுக்காமல், குறைவான எண்ணிக்கையில் உள்ள வார்டுகளை ஒதுக்கி உள்ளனர். எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விதிகளின்படி, ஆதிதிராவிடர்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பெரியண்ணன், ராஜிபாபு என்பவர்களும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்த போது, பல்வேறு முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றை சரி செய்யும்படி, புதுச்சேரி தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர். அவசரமாக, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக, சட்டத்துக்கு புறம்பாக நடத்தலாம் என்பது அல்ல எனவும் கூறியிருந்தது.

இந்நிலையில், வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. புதுச்சேரி அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, ''வார்டு ஒதுக்கீடு குறித்து மறுஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் முன், இந்தப் பிரச்னை உள்ளது. தேர்தல் நடவடிக்கையை தொடர மாட்டோம்,'' என்றார்.அதைத்தொடர்ந்து, முதல் பெஞ்ச் 'வரும் 21 ம் தேதி முதல் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க அறிவுறுத்தி இருப்பதாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே துவங்கப்பட்ட வேட்புமனுக்கள் பெறும் நடவடிக்கையை, நிறுத்தி வைக்க வேண்டும்' என உத்தரவிட்டது.

இதையடுத்து, முதல் பெஞ்ச் முன், நேற்று, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து, வரும் 7 ம் தேதி அறிவிப்பு வௌியிட உள்ளதாக தெரிவித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வாபஸ் பெற அனுமதிக்கவும் கோரினார்.

அதைத்தொடர்ந்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

புதிதாக தேர்தல் அறிவிப்பாணை வௌியிட, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதன்படி, அனுமதி வழங்கப்படுகிறது. முந்தைய தேர்தல் அறிவிப்பு ரத்து செய்த பின், ஐந்து நாட்களில் புதிதாக அறிவிப்பாணை வௌியிட வேண்டும்.இடஒதுக்கீடு வழங்கி, சுழற்சி முறைக்கு இந்த தேர்தலை முதலாவதாக கருதி, புதிய அறிவிப்பாணையை வௌியிட வேண்டும். முரண்பாடுகள் களையப்பட்டு எந்த தவறும் இன்றி புதிய அறிவிப்பாணை இருக்கும் என நம்புகிறோம். அப்போது தான், விரைந்து தேர்தல் நடத்த முடியும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X