8 மாவட்டங்களில் இன்று கனமழை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

8 மாவட்டங்களில் இன்று கனமழை

Added : அக் 06, 2021
Share
சென்னை : 'எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் புறநகர்


சென்னை : 'எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்கள், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில், பெரும்பாலான பகுதிகளில் இன்றும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று அதிகாலை முதல், பரவலாக பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X