பொது செய்தி

தமிழ்நாடு

'பணிமூப்பால் பதவி கிடைத்தது'

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை : 'பணி மூப்பின் அடிப்படையில் தான், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனர் பதவி எனக்கு கிடைத்துள்ளது' என்று விசயராகவன் தெரிவித்துள்ளார்.உலக தமிழராய்ச்சி நிறுவன இயக்குனராக இருந்த கோ.விசயராகவன், சமீபத்தில், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். தனக்கு வழங்கப்பட்ட பதவி குறித்த சர்ச்சைகளுக்கு,

சென்னை : 'பணி மூப்பின் அடிப்படையில் தான், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனர் பதவி எனக்கு கிடைத்துள்ளது' என்று விசயராகவன் தெரிவித்துள்ளார்.
உலக தமிழராய்ச்சி நிறுவன இயக்குனராக இருந்த கோ.விசயராகவன், சமீபத்தில், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். தனக்கு வழங்கப்பட்ட பதவி குறித்த சர்ச்சைகளுக்கு, அவர் அளித்துள்ள விளக்கம்:

நான் 2012 முதல் 2020 வரை, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குனராக இருந்தேன். அந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி பணிகளை, அரசின் கோட்பாடுகளுக்கு உட்பட்டே செய்துள்ளேன்.அனைத்து பணிகளுக்கும் கோப்புகளும், பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை, மத்திய, மாநில அரசுகளின் கணக்காய்வு மற்றும் உள்ளாட்சி தணிக்கை அலுவலகங்கள் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கைகள் அனுப்பியுள்ளன.

நான் பணியில் சேர்ந்த நாள் முதல், இதுவரை, தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சி என்ற உணர்வுடன் செயலாற்றுகிறேன். தமிழக அரசு எந்த பணி வழங்கினாலும், அதை உண்மையாக செய்வதை கடமை என உணர்ந்துள்ளேன்.அந்த வகையில், தற்போது வழங்கப்பட்டுள்ள அகர முதலி திட்ட இயக்குனர் பணியும் இயல்பானது தான்.அவரவர் பணி மூப்பின் அடிப்படையில் தான், பணிகளை அரசு வழங்குகிறது.அந்த வகையில் யாரையும் பழி வாங்கவோ, தரம் குறைக்கவோ, எனக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாக கூறுவதில் ஆதாரமில்லை.

இவ்வாறு விசயராகவன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X