கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., இணைப்பு மோசடி: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு இணைப்பை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்ட நபருக்கு, மூன்றாண்டு சிறை தண்டை விதித்து, நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், திருங்குறுங்குடியை சேர்ந்தவர் மாரிதுரை, 24. இவர், பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு இணைப்புக்கு, போலியான பெயரில் ஆவணங்களை சமர்ப்பித்து, இணைப்பு பெற்றுள்ளார்.அந்த இணைப்பின் வாயிலாக, 19 லட்சத்து, 9,242

சென்னை : பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு இணைப்பை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்ட நபருக்கு, மூன்றாண்டு சிறை தண்டை விதித்து, நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திருங்குறுங்குடியை சேர்ந்தவர் மாரிதுரை, 24. இவர், பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு இணைப்புக்கு, போலியான பெயரில் ஆவணங்களை சமர்ப்பித்து, இணைப்பு பெற்றுள்ளார்.அந்த இணைப்பின் வாயிலாக, 19 லட்சத்து, 9,242 ரூபாய்க்கு, பல்வேறு சேவைகளை பெற்றுள்ளார். ஆனால், சேவைக்கான கட்டணம் செலுத்தாமல் தலைமறைவாகியதால், திருநெல்வேலி, பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் ராஜு, நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், தலைமறைவாகி இருந்த குற்றவாளியை, நாகர்கோவில் குற்றப்பிரிவு போலீசார், கைது செய்து, மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கில், மாரிதுரை மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், மூன்றாண்டு சிறை, 11 ஆயிரம் அபராதம், அபராத தொகையை செலுத்த தவறினால், ஆறு மாதம் கூடுதல் சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
06-அக்-202118:21:22 IST Report Abuse
K. V. Ramani Rockfort இந்த நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு ஏற்புடையது, அதே சமயம் நீண்டகாலமாக மத்திய அமைச்சர் பணியில் இருந்து, பிஸ்னல்க்கு தங்கள் நிறுவனத்துக்காக நஷ்டத்தை ஏற்படுத்திய மாறன், மற்றும் அவரது சகோதரர் பற்றி தெரியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X