தி.மு.க., பிரமுகர் தற்கொலை

Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை : ஜாம்பஜார், முகமது உசேன் லேனைச் சேர்ந்தவர் வித்தியகுமார், 38. தி.மு.க., பிரமுகரான இவர், அப்பகுதியில் பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். அவருக்கும், நிஷா என்பவருக்கும், 8 மாதங்களுக்கு முன் திருமணமானது.வித்தியகுமாரின் மதுப்பழக்கத்தால், தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம், அண்ணாசாலை காவல் நிலையத்தில் நிஷாவின் தாயார்,

சென்னை : ஜாம்பஜார், முகமது உசேன் லேனைச் சேர்ந்தவர் வித்தியகுமார், 38. தி.மு.க., பிரமுகரான இவர், அப்பகுதியில் பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். அவருக்கும், நிஷா என்பவருக்கும், 8 மாதங்களுக்கு முன் திருமணமானது.வித்தியகுமாரின் மதுப்பழக்கத்தால், தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம், அண்ணாசாலை காவல் நிலையத்தில் நிஷாவின் தாயார், வித்தியகுமார் மீது மகளை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார்.இதை அறிந்த அவர், மனமுடைந்து அன்றைய தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வித்தியகுமார் தற்கொலை செய்வதற்கு முன், மொபைல் போனில், தன் சாவுக்கு, மனைவியின் குடும்பம் தான் காரணம் என வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார்.

அந்த பதிவில், தன் மனைவி நிஷா, மனைவியின் சகோதரி உஷா மற்றும் அவரது கணவர் ஆகியோர் தன்னை பல வகைகளில் துன்புறுத்தி வருவதாகவும், நிஷா மற்றும் அவரது உறவினர்கள் அடிப்பதாலேயே தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X