பா.ஜ., அரசு மக்களுக்கானது அல்ல; அகிலேஷ் விமர்சனம்

Added : அக் 06, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
லக்னோ: உ.பி.,யிலும், மத்தியிலும் பா.ஜ., ஆட்சி நடத்தும் விதம் மக்களுக்கானது அல்ல என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். அங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இச்சம்பவம்
Akhilesh Yadav, Samajwadi, Vijay Yatra, Uttar Pradesh, BJP, அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி, விஜய் யாத்திரை, வெற்றிப்பயணம், உத்தர பிரதேசம், உபி, பாஜக, பாஜ, மக்களுக்கான அரசு, அல்ல

லக்னோ: உ.பி.,யிலும், மத்தியிலும் பா.ஜ., ஆட்சி நடத்தும் விதம் மக்களுக்கானது அல்ல என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். அங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இச்சம்பவம் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அக்.,12ம் தேதி முதல் ‛சமாஜ்வாதி விஜய் யாத்திரை' (வெற்றிப் பயணம்) துவங்கப்பட உள்ளதாக அக்கட்சி தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அகிலேஷ் அளித்த பேட்டி:


latest tamil news


உத்தர பிரதேச மக்கள் பா.ஜ., அரசாங்கத்தால் ஏமாற்றமடைந்துள்ளனர். அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் நாங்கள் பிரபலமான முகங்களை களமிறக்குவோம். தேர்தல் தேதி அறிவித்தவுடன் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்போம். மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ., ஆட்சி நடத்தும் விதம் மக்களுக்கானது அல்ல. பா.ஜ., கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் விளைவாக சமாஜ்வாதி கட்சி எதிர்வரும் தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி நின்றுவிட்டது, மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டமும் துவங்கவில்லை, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, பெண்கள் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர்.

லக்கிம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ., அரசு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் என்பதில் நம்பிக்கையில்லை. இந்த அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியுமாறு நாங்கள் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். வன்முறை நடந்த இடத்தில் உள்ள வீடியோக்களில் மத்திய அமைச்சரின் மகன் வன்முறையில் ஈடுபடுவது தெரிகிறது. அஜய் மிஸ்ரா இன்னும் அமைச்சராக இருந்தால், அவரது வீட்டிற்குள் போலீஸ் எப்படி நுழையும்? அவர் ராஜினாமா செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேசியமும் தெய்வீகமும் தொப்பி உள்ள மனிதர்கள் இந்தியாவுக்கே தேவையில்லா ஒன்று
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
06-அக்-202123:12:03 IST Report Abuse
s t rajan மந்திரியின் காரில் கண்ணாடியை போராட்டக் காரர்கள் உடைத்ததனால், கார் driver control இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் மந்திரியின் காரில் அவர் மைந்தர் இருக்க வில்லை என்றும் சொல்லப்படுகிறது ? விவசாயிகள் இறந்ததை சொல்லும் மீடியாக்கள் அந்தக் காரில் இருந்தவர்களும ஆர்பாட்டக்காரர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாகவும் whatsspp செய்திகள் வருகின்றனவே ? CBI inquiry செய்து உண்மையை வெளிக் கொணர வேண்டும்
Rate this:
Cancel
06-அக்-202118:22:22 IST Report Abuse
பேசும் தமிழன் முன்பு ஆட்சி செய்த போது.... உத்தரபிரதேசத்தில் பாலாறும் தேனாறும் ஓடின... இப்போது அது இல்லை... என்னப்பா கலர் கலரா ரீல் விடுற.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X