சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரூர் அருகே பிரபல ரவுடி கொலை: மர்ம நபர்கள் அட்டகாசம்!

Added : அக் 06, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள கருப்பத்தூரில் நாராயணன் மகன் கோபால் வயது 52 பிரபல ரவுடி, இன்று அதிகாலை தன் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தலைப் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இவர் மீது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு தயாரித்தல் மற்றும் கொலை, குற்றம் என தென்மாவட்டங்களில் 10க்கும்
கரூர் அருகே பிரபல ரவுடி கொலை: மர்ம நபர்கள் அட்டகாசம்!

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள கருப்பத்தூரில் நாராயணன் மகன் கோபால் வயது 52 பிரபல ரவுடி, இன்று அதிகாலை தன் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தலைப் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இவர் மீது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு தயாரித்தல் மற்றும் கொலை, குற்றம் என தென்மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. மனைவி பொன்மணி, இரண்டு மகள்கள் தமிழ்பொன்னி, கயல்பொன்னி மற்றும் நரேன்கார்த்திக், நரேன்ராஜ் என 2 மகன்கள் உள்ளனர். லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்து எஸ்.பி., சுந்தரவடிவேல் நேரில் ஆய்வு செய்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சற்று தொலைவு தூரம் ஓடி நாய் நின்றது மேலும், இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X