பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.,12ல் 'புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‛புலம்பெயர் தமிழர் நலவாரியம்' என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் ‛புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' கொண்டாடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புலம்பெயர்ந்து வாழும்
Tamilnadu, Stalin, CM, DMK, புலம்பெயர் தமிழர்கள், நலவாரியம், முதல்வர், ஸ்டாலின்,

சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‛புலம்பெயர் தமிழர் நலவாரியம்' என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் ‛புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' கொண்டாடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011ம் ஆண்டு மார்ச் 1-ம் நாள் திமுக அரசால் இயற்றப்பட்டது. ‛புலம்பெயர் தமிழர் நலவாரியம்' ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அதனை அமைக்க முடியவில்லை. அடுத்துவந்த ஆட்சியாளர்களும் இதனை அமைக்கவில்லை. இந்நிலையில், அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு ‛புலம்பெயர் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும்.


latest tamil news


ஐந்து கோடி ரூபாய், ‛புலம்பெயர் தமிழர் நலநிதி' என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். மூலதனச் செலவினமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் ‛புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' கொண்டாடப்படும். வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனைப் பேணிட, மொத்தம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம் (டேட்டா பேஸ்) ஏற்படுத்தப்பட்டு, இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம், அடையாள அட்டையுடன் வழங்கப்படும் போன்ற பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
07-அக்-202100:51:33 IST Report Abuse
Mohan புலம் பெயர்ந்த தெலுங்கர் நாள் எப்போ.
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
06-அக்-202122:17:25 IST Report Abuse
R KUMAR அநேகமாக ஜனவரி பனிரெண்டாம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202121:59:57 IST Report Abuse
Vittalanand நீயே புலப்பெயர்ந்தவன் தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X