பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ‛‛ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும்,'' சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:இன்று (அக்.,6ம் தேதி): தமிழக கடலோர பகுதியை ஒட்டி (5,8 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரியில்
ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, மிக கனமழை, சென்னை வானிலை, ஆய்வு மையம் அறிவிப்பு,

சென்னை: ‛‛ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும்,'' சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


latest tamil news


இன்று (அக்.,6ம் தேதி): தமிழக கடலோர பகுதியை ஒட்டி (5,8 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், வேலுார், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 7ம் தேதி: வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மிதமான மழையும் பெய்யக்கூடும்,

அக்.,8ம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், தர்மபுரி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


அக்., 9ம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மிதமான மழையும் பெய்யக்கூடும்,

அக்., 10ம் தேதி: வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லோசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:


காஞ்சிபுரம் 18 செ.மீ., திருத்தணி (திருவள்ளூர்) 12 செ.மீ., வெம்பாக்கம் (திருவண்ணாமலை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 11 செ.மீ., செய்யார் (திருவண்ணாமலை), மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 10 செ.மீ., அரக்கோணம் (ராணிப்பேட்டை), கூடலுார் (தேனி), பரமக்குடி (ராமநாதபுரம்), வேப்பூர் (கடலுார்) தலா 9 செ.மீ., திருபுவனம் (சிவகங்கை), சோழிங்கநல்லுார் (சென்னை) தலா 8 செ.மீ., சூரலக்கோடு (கன்னியாகுமரி), மவுலத்துார் (வேலுார்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), அம்பத்துார் (திருவள்ளூர்) தலா 7 செ.மீ.,

குறிப்பு: வரும் 10ம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



அரபிக்கடல் பகுதிகள்:


இன்று 6ம் தேதி: லட்சத்தீவு, மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
06-அக்-202113:42:22 IST Report Abuse
vpurushothaman அப்படியாயின் கொங்கு மண்டலத்துக்கு கொண்டாட்டம்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X