லக்கிம்பூர் செல்ல தடை விதிப்பது புதுமாதிரியான லாக்டவுனா?; சஞ்சய் ராவத் கேள்வி| Dinamalar

லக்கிம்பூர் செல்ல தடை விதிப்பது புதுமாதிரியான லாக்டவுனா?; சஞ்சய் ராவத் கேள்வி

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (27)
Share
மும்பை: லக்கிம்பூர் செல்ல தடை விதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், ‛ ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது புதுமாதிரியான லாக்டவுனா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ShivSena, Sanjay Raut, New Lockdown, Lakhimpur Kheri, Restriction, BJP, UP, சிவசேனா, சஞ்சய் ராவத், புது லாக்டவுன், லக்கிம்பூர்,

மும்பை: லக்கிம்பூர் செல்ல தடை விதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், ‛ ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது புதுமாதிரியான லாக்டவுனா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்., பொதுச்செயலர் பிரியங்கா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், லக்கிம்பூர் கெரி மாவட்டத்துக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி செல்லவுள்ளதாக காங்., எம்.பி., ராகுல் தெரிவித்தார். இதனையடுத்து லக்கிம்பூர் செல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.


latest tamil news


முன்னதாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். என்ன விதமான சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறீர்கள்? உத்தரப் பிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது? உ.பி., செல்லும் இந்தியர்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்? ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது என்ன புதுமாதிரியான லாக்டவுனா?

பிரியங்கா கைது செய்யப்பட்டுள்ளார், ராகுல் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார், ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு அனுமதியில்லை. இவர்கள் எல்லாம் என்ன குற்றம் செய்தார்கள்? நாட்டில் புதிதாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறதா? ஆளும் கட்சியின் கூண்டுக்கிளி போன்று மாவட்ட நிர்வாகம் இருக்கிறது. அரசாங்கம் என்ன விதிமுறைகள் கூறினாலும் அதைக் கடைப்பிடிக்கிறது. விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X