பொறுப்பின்றி ராகுல் செயல்படுகிறார்: பா.ஜ., பதிலடி| Dinamalar

பொறுப்பின்றி ராகுல் செயல்படுகிறார்: பா.ஜ., பதிலடி

Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: டில்லியில் நிருபர்களை சந்தித்த பா.ஜ., செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: ராகுல் பொறுப்பின்றி செயல்படுகிறார். பிரேத பரிசோதனை குறித்து ராகுல் கேள்வி கேட்கிறார். அவர் மருத்துவ நிபுணரா? நிபுணர்கள் தான் பிரேத பரிசோதனை செய்கின்றனர். அவர்கள் ஏன் தவறாக வழிநடத்துவார்கள். ராகுல் மற்றும் காங்கிரஸ் விவசாயிகள், வியாபாரிகளுக்காக எதையும் செய்தது இல்லை.

புதுடில்லி: டில்லியில் நிருபர்களை சந்தித்த பா.ஜ., செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: ராகுல் பொறுப்பின்றி செயல்படுகிறார். பிரேத பரிசோதனை குறித்து ராகுல் கேள்வி கேட்கிறார். அவர் மருத்துவ நிபுணரா? நிபுணர்கள் தான் பிரேத பரிசோதனை செய்கின்றனர். அவர்கள் ஏன் தவறாக வழிநடத்துவார்கள். ராகுல் மற்றும் காங்கிரஸ் விவசாயிகள், வியாபாரிகளுக்காக எதையும் செய்தது இல்லை. தங்களுக்காக மட்டுமே ராகுல் மற்றும் குடும்பத்தினர் கவலைப்படுகினறனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் அவர்களை விமர்சனம் செய்ய துவங்கி உள்ளனர். முழுநேர தலைவர் இல்லாதது குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.


தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக லக்கிம்பூர் விவகாரத்தை ராகுல் குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். உ.பி., விவகாரத்தில் இருந்து அரசியல் லாபம் அடைய ராகுல் முயற்சி செய்கிறார். அடக்குமுறை குறித்து ராகுல் கூறுகிறார். ஆனால், கபில் சிபலை வெளியில் விமர்சிக்கிறார். காங்கிரசில் என்ன மாதிரியான ஜனநாயகம் உள்ளது. ஜனநாயக உரிமையை, மோடியை விமர்சிக்க மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது . கபில் சிபல் மீது தக்காளியை வீசுவது தான் ஜனநாயகமா. ராகுல் குடும்பத்தினர் மற்றும் வாத்ரா ஆகியோர் பல வழக்குகளில் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இது பற்றி ராகுல் பேசுவதில்லை. 70 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X