விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் சாணிப்பவுடர் குடித்து இறந்தார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் சாணிப்பவுடர் குடித்து இறந்தார்

Added : அக் 06, 2021
Share
திருப்பூர்: திருப்பூரை அடுத்த மங்கலம் பரமசிவம்பாளையத்தை சேர்ந்த சண்முகம், 41. இவருக்கு சொத்து பிரச்னை உள்ளது. எதிர்தரப்பை சேர்ந்த பெண் நடந்து சென்ற போது, காரில் சென்ற சண்முகம் மோதியதாக தெரிகிறது. இதுகுறித்து புகாரின் பேரின் மங்கலம் போலீசார், விசாரணை நடத்த சண்முகத்தை இன்று காலை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, சற்று நேரத்தில், பாத்ரூம் செல்வதாக சண்முகம்

திருப்பூர்: திருப்பூரை அடுத்த மங்கலம் பரமசிவம்பாளையத்தை சேர்ந்த சண்முகம், 41. இவருக்கு சொத்து பிரச்னை உள்ளது. எதிர்தரப்பை சேர்ந்த பெண் நடந்து சென்ற போது, காரில் சென்ற சண்முகம் மோதியதாக தெரிகிறது. இதுகுறித்து புகாரின் பேரின் மங்கலம் போலீசார், விசாரணை நடத்த சண்முகத்தை இன்று காலை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து, சற்று நேரத்தில், பாத்ரூம் செல்வதாக சண்முகம் கூறினார். அவரை அழைத்து சென்ற போது, திடீரென வாந்தி எடுத்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல், கையில் மறைத்து வைத்திருந்த சாணிப்பவுடரை வாயில் போட முயற்சி செய்தார். அங்கு பணியில் இருந்த பணியாளர்கள், போலீசார் தடுத்தனர். சற்று நேரத்தில், மயக்கமடைந்தார். பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முகம் இறந்ததாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்வதை அறிந்து முன்கூட்டியே, சாணிப்பவுடரை சாப்பிட்டாரா அல்லது பாத்ரூம் சென்ற இடைவெளியில் சாப்பிட்டாரா என்பது குறித்து மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் இறந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X