2050க்குள் 500 கோடி பேருக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்: ஐ.நா., எச்சரிக்கை

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜெனிவா: 'உலகளவில் வரும் 2050க்குள் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்' என, ஐ.நா., எச்சரித்துள்ளது.ஐ.நா.,வின் உலக வானிலை அமைப்பு (டபிள்யு.எம்.ஓ.,) 'தண்ணீருக்கான 2021ம் ஆண்டுக்கான காலநிலை சேவைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுக்கு 1 செ.மீ., அளவில், மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல்,

ஜெனிவா: 'உலகளவில் வரும் 2050க்குள் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்' என, ஐ.நா., எச்சரித்துள்ளது.

ஐ.நா.,வின் உலக வானிலை அமைப்பு (டபிள்யு.எம்.ஓ.,) 'தண்ணீருக்கான 2021ம் ஆண்டுக்கான காலநிலை சேவைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:latest tamil newsகடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுக்கு 1 செ.மீ., அளவில், மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல், நிலப்பரப்பில் நீர் குறைதல், நீர் தேங்கிவைத்தல் குறைவு போன்றவை நிகழ்ந்துள்ளன. மேலும் பருவநிலை மாறுபாடால் தண்ணீர் தொடர்பான பேரிடர்களான பெருவெள்ளம், பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் வரும் காலத்தில் ஏற்படும்.


latest tamil newsதற்போது உலகளவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மோசமான நிலையில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரை அசுத்தப்படுத்துவது, அதனால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து உள்ளது. தற்போது பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படாமல், சுத்தமான நீராக இருக்கிறது.

கடந்த 2018ல் ஆண்டில் ஒரு மாதம் 360 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்தனர். இது, 2050க்குள் 500 கோடியாக உயரும். ஆதனால், கூட்டுறவு நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த நீர் மற்றும் காலநிலை கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
07-அக்-202100:42:17 IST Report Abuse
PRAKASH.P No worries .. before that our leaders will 50%. Of us..
Rate this:
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
06-அக்-202121:28:50 IST Report Abuse
DSM .S/o PLM 2030 இல் இந்திய மக்கள் தொகை இருநூறு கோடி என்று வைத்து கொண்டால் கூட குறைந்த பட்சம் மேலும் முன்னூறு கோடி பேர் இந்தியாவிற்கு வெளியே இந்த பிரச்சினையை சந்திப்பார்கள். எனவே, நமக்கு துணைக்கு , சொல்லப்போனா கம்பெனி கொடுக்க ஆளிருக்கு. டோன்ட் ஓரி
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
06-அக்-202119:52:03 IST Report Abuse
Ramesh Sargam அந்த நிலை தமிழ் நாட்டில் 2030க்குள் வர அதிகம் வாய்ப்பிருக்கிறது. 2030க்குள், தமிழகத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச நீர்நிலைகளை 'கழக அரசுகள் (DMK and ADMK)' போட்டி போட்டு எடுத்து, பல அடுக்கு கட்டிடங்களை தங்கள் பெயரிலும், தங்கள் வாரிசுகள் பெயரிலும் மற்றும் பினாமி பெயரிலும் கட்டிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X