சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரில் ஆடுகளை கடத்திய 2 சிறுவர்கள் கைது

Added : அக் 06, 2021
Share
Advertisement
அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே, காரில் ஆடுகளை கடத்திய இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த ஏரியூரைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம், 45, அண்ணாமலை, 60. விவசாயிகளான இவர்கள் 12 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். மாலை 5:00 மணிக்கு அந்த வழியாக காரில் வந்த நான்கு பேர் வயலில்

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே, காரில் ஆடுகளை கடத்திய இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த ஏரியூரைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம், 45, அண்ணாமலை, 60. விவசாயிகளான இவர்கள் 12 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். மாலை 5:00 மணிக்கு அந்த வழியாக காரில் வந்த நான்கு பேர் வயலில் மேய்ந்து கொண்டிருந்த நான்கு ஆடுகளை நேற்று காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காரை விரட்டிச் சென்று ராஜபாளையம் பகுதியில் மடக்கினர்.
அப்போது, காரில் இருந்த இரண்டு பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து வேப்பங்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மற்ற இரண்டு பேர் காருடன் தப்பியோடினர். விசாரணையில், அவர்கள் அணைக்கட்டை சேர்ந்த 16, 17 வயதுள்ள சிறுவர்கள் என்பதும், ஆடு திருடும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. போலீசார் அவர்களை இன்று கைது செய்து செங்கல்பட்டு சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். காரில் ஆடுகளுடன் தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X