லக்கிம்பூர் வன்முறை - குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற அரசு முயற்சி; கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற பா.ஜ., அரசு முயற்சி செய்கிறது,'' என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.உ.பி., மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு
Lakhimpur Kheri, Arvind Kejriwal, Govt, Trying, To Save, Accused, லக்கிம்பூர், வன்முறை, வழக்கு, அரவிந்த் கெஜ்ரிவால், அரசு, குற்றவாளிகள், காப்பாற்ற முயற்சி, டில்லி, உபி

புதுடில்லி: ‛‛லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற பா.ஜ., அரசு முயற்சி செய்கிறது,'' என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

உ.பி., மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒருபக்கம் அரசு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது, மறுபக்கம் லக்கிம்பூர் செல்லும் அரசியல் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். பிரதமர் அவர்களே இதற்கான காரணம் என்ன?


latest tamil news


இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் மற்றும் மத்திய அமைச்சரை அவரது பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று நாடு விரும்புகிறது. ஒட்டுமொத்த தேசமும் தொலைக்காட்சியில் வன்முறை எப்படி நடந்தது?, விவசாயிகள் எப்படி ஓடுகிறார்கள்? என்று பார்த்துள்ளார்கள். பட்டப்பகலில், பல மக்கள் முன்னிலையில் மக்களைக் கொன்ற போதிலும் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை காப்பாற்றுவதில் முழு அமைப்பும் (பா.ஜ., அரசு) ஈடுபட்டுள்ளது போல் தோன்றுகிறது. ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே இதுபோன்ற விஷயங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.


latest tamil news


இன்று, பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் வன்முறைக்கு காரணமான காரில் அமைச்சரின் மகன் இல்லை என்கின்றனர். ஒருவாரம் கழித்து, சம்பவத்தில் கார் இல்லை எனக் கூறுவர், அதன்பிறகு மற்றொரு வாரம் அந்த இடத்தில் விவசாயிகளே இல்லை எனவும் சொல்வார்கள். இங்கு எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு குடிமகனும் நீதி கேட்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
07-அக்-202100:39:37 IST Report Abuse
PRAKASH.P This is planned terror incident by bjp
Rate this:
Cancel
06-அக்-202121:40:01 IST Report Abuse
ராஜா Oxygen திருடன்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-அக்-202121:22:51 IST Report Abuse
sankaseshan கேசரி, உச்ச கோர்ட் ஜட்ஜா? இவர் குற்றம் சொன்ன அது வேதவாக்கா? UP அரசு விசாரணைக்கு உத்தரவு போய்ட்டிருக்கிறது அது தெரியும் வரை வாயை மூடிக்கிட்டு இருக்கணும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X