அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 06, 2021
Share
அறிவியல் ஆயிரம்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்பிளாஸ்டிக் குப்பை அதிகம் சேரும் கடல் பகுதியாக மத்திய தரைக்கடல் உள்ளது. இங்கு தற்போது 3760 டன் பிளாஸ்டிக் மிதக்கின்றன என கிரீஸின் கடல் ஆராய்ச்சி மைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடலில் ஆண்டுதோறும் 17,600 டன் பிளாஸ்டிக் குப்பை கலக்கின்றன. இதில் 84 சதவீதம் கடற்கரையிலும். 16 சதவீதம் கடல் நீரிலும் கலக்கின்றன. உலகில் 2.50 லட்சம் டன்

அறிவியல் ஆயிரம்

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்


பிளாஸ்டிக் குப்பை அதிகம் சேரும் கடல் பகுதியாக மத்திய தரைக்கடல் உள்ளது. இங்கு தற்போது 3760 டன் பிளாஸ்டிக் மிதக்கின்றன என கிரீஸின் கடல் ஆராய்ச்சி மைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடலில் ஆண்டுதோறும் 17,600 டன் பிளாஸ்டிக் குப்பை கலக்கின்றன. இதில் 84 சதவீதம் கடற்கரையிலும். 16 சதவீதம் கடல் நீரிலும் கலக்கின்றன. உலகில் 2.50 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பை கடலில் மிதக்கின்றன என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். ஜவுளி, டயர் தொழிற்சாலை உட்பட பல இடங் களிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகள் உருவாகின்றன.

தகவல் சுரங்கம்

உலக பருத்தி தினம்


விவசாயிகளுக்கு வருமானம், மக்களுக்கு ஆடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் பருத்தி நன்மை அளிக்கிறது. இது வறட்சியை தாங்கி விளையும் பயிர் என்பதால் இதற்கான உற்பத்தி செலவு குறைவு. உலகின் ஜவுளித்தேவையில் 27 சதவீத்தை பருத்தி பூர்த்தி செய்கிறது. பெனின், புர்கினா பாசோ, சாத், மாலி ஆகிய நாடுகள் வேண்டுகோளுக்கிணங்க உலக வர்த்தக அமைப்பு 2019 அக்.7ல் இத்தினத்தை அறிவித்தது. 'நன்மைக்கு பருத்தி' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பருத்தி விளைச்சலில் இந்தியா, அமெரிக்கா, சீனா முதல் 3 இடங்களில் உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X