பொது செய்தி

தமிழ்நாடு

அம்முண்டியில் தேர்தல் புறக்கணிப்பு ஓட்டு போட வருமாறு கெஞ்சல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் அருகே, அம்முண்டியில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.வேலுார் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் அம்முண்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டியலின பெண்கள் இல்லை. இதனால் பொது பிரிவுக்கு மாற்றும்படி மக்கள் விடுத்த கோரிக்கையை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.இதனால் தலைவர் பதவிக்கும், ஒன்பது வார்டு
அம்முண்டியில் தேர்தல் புறக்கணிப்பு ஓட்டு போட வருமாறு கெஞ்சல்

வேலுார்:வேலுார் அருகே, அம்முண்டியில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.

வேலுார் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் அம்முண்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டியலின பெண்கள் இல்லை. இதனால் பொது பிரிவுக்கு மாற்றும்படி மக்கள் விடுத்த கோரிக்கையை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் தலைவர் பதவிக்கும், ஒன்பது வார்டு உறுப்பினர் பதவிக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் இப்பகுதியில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தி,மு.க., அ.தி.மு.க., வை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர்.
இதனால் அம்முண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஓட்டு பதிவு மையம் அமைக்கப்பட்டது.

இன்று காலை ஓட்டு பதிவு தொடங்கியதும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இப்பகுதி மக்கள் யாரும் ஓட்டு போடவில்லை. தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக கூறி தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.திருவலம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் ஓட்டு போட மறுத்து விட்டனர்.

இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த துப்புறவு தொழிலாளர்கள் சிலரை அழைத்து நீங்கள் மட்டுமாவது ஓட்டு போடுங்கள் என அதிகாரிகள் கெஞ்சினர். ஆனால் ஊர் கட்டுப்பாடு, இதை மீற முடியாது, எங்கள் பதவியை கூட ராஜினாமா செய்வதாக கூறி ஓட்டு போட மறுத்து விட்டனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் செய்த தவறால் இப்பிரச்சனை பூதாகாரமாக வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை 5 மணி வரை யாரும் ஓட்டு போடவில்லை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X