உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி: பஞ்சாப், சத்தீஸ்கர் இணைந்து வழங்குகிறது

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசின் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளரின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் அரசுகள் தனித்தனியாக தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது. லக்கிம்பூரில் ஞாயிறன்று நடந்த வன்முறையில் எட்டு பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேர் விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர், இருவர்

லக்னோ: உத்தர பிரதேசின் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளரின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் அரசுகள் தனித்தனியாக தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது.



latest tamil news



லக்கிம்பூரில் ஞாயிறன்று நடந்த வன்முறையில் எட்டு பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேர் விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர், இருவர் பா.ஜ.க., தொண்டர்கள் மற்றும் உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் ஓட்டுநரும் அடங்குவர். கடந்த 2 நாட்களாக சம்பவ இடத்திற்கு செல்ல தலைவர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். தற்போது ராகுல், பிரியங்கா உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் லக்கிம்பூர் வர போலீஸ் அனுமதி தந்துள்ளது. பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுடன் ராகுல் விமானம் மூலம் லக்னோ வந்துள்ளார்.


latest tamil news



லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங், “லக்கிம்பூர் வன்முறை 1919-ல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையை நினைவூட்டுகிறது. உபி அரசு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியுள்ளது. வன்முறையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மற்றும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயை எங்கள் அரசு வழங்கும்.” என்றார். இதே கருத்தை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் கூறினார். தனது அரசும் பத்திரிகையாளர் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் வழங்கும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202104:56:41 IST Report Abuse
ராஜா பலே...பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மக்களின் பணத்தில் காங்கிரஸ் உபியில் அரசியல் ஆதாயம் தேடுகிறது. ஏன் கட்சியின் நிதியில் இருந்து கொடுக்க வேண்டியது தானே?! மேலும் இந்த போராட்டத்தை தூண்டிவிட்டதே காங்கிரஸ் தான். நீதி விசாரணையில் கண்டிப்பாக உண்மை வெளியே வரும்.
Rate this:
Cancel
06-அக்-202122:25:24 IST Report Abuse
உண்மை எவ்வளவோ புலனாய்வு அமைப்புகள் பெற்றுள்ள மத்திய அரசு இது பற்றி விசாரிக்க வேண்டும். அடுத்த மாநிலத்தவர்கள் உயிரிழப்புகளுக்கு பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் நிவாரணம் வாரி வழங்குவதின் பிண்ணனி ஆராயப்பட்டு தெளிவுபடுத்த வேண்டும். எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் அமர துடிப்பது தெளிவாகிறது.இது மாதிரியான பிரச்சினைகள் தொடர்ந்தால் மத்திய அரசு பலவீனம் அடையும். எச்சரிக்கை தேவை. ஐ பேக் போன்ற அரசியல் வியாபாரிகள் கண்காணிக்க பட வேண்டும்.
Rate this:
Cancel
06-அக்-202121:41:41 IST Report Abuse
இந்தியன் எல்லாமும் அரசியல்... கிட்டதட்ட ஒரு வருஷம்.. வேலை செய்யாமல்...இருக்கும் விவசாயி.. யை... இந்த உலகத்தில் யாரவது கேள்வி பட்டது உண்டா.... உண்டு எனில் அவர்கள் என் இந்திய (விரோத) விவசாயிகள் மட்டும் தான்... ...கிராமத்தில் ஒரு கதை சொல்வாங்க.....மழையே பெய்யாத போதும் உழம் விவசாயியை பார்த்து கடவுள் கேட்டாராம்..ஏன் உழவு செய்கிறாய் என்று...அதற்கு விவசாயி சொன்ன பதில்..எனக்கு தெரிஞ்சது வா நான் மறந்துட்டா..அப்டின்னு..உடனே கடவுள் வெட்கபட்டு மழையை பெய்ய வைத்தாராம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X