பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒட்டு பதிவு

Added : அக் 06, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் மாவட்டத்தில், பெரும்பாலான ஓட்டுச் சாவடிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஓட்டு பதிவு நடந்தது.முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வேலுார் மாவட்டத்தில், குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு ஒன்றியங்களில் இன்று நடந்தது.இதில் ஒன்பது மாவட்ட கவுன்சிலர், 88 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 154 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 1,302 பஞ்சாயத்து வார்டு
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒட்டு பதிவு

வேலுார்:வேலுார் மாவட்டத்தில், பெரும்பாலான ஓட்டுச் சாவடிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஓட்டு பதிவு நடந்தது.

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வேலுார் மாவட்டத்தில், குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு ஒன்றியங்களில் இன்று நடந்தது.இதில் ஒன்பது மாவட்ட கவுன்சிலர், 88 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 154 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 1,302 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு ஓட்டு போட்டனர்.
இதற்காக 862 ஓட்டு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் 84 பதட்டமான ஓட்டு பதிவு மையங்கள் ஆனதால் இங்கு நுண் பார்வையாளர்கள் கண்காணித்தனர். இங்கு ஓட்டு நேரடியாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. 598 ஓட்டு சாவடிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டது.

2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் சானிடைசர் கொண்டு கைதிகள் சுத்தம் செய்தனர். வெப்ப பரிசோதனை செய்தனர். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஓட்டு போட்டனர்.தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களும் முகக்கவசம், கையுறை அணிந்திருந்தனர்.

காலை 9:00 மணிக்கு பிறகு விட்டு விட்டு மழை பெய்தது. ஓட்டு பதிவு மையம் உள்ள இடம் சேறும், சகதியுமாக காணப்பட்டது. ஆனாலும் மக்கள் ஓட்டு போட்டனர்.குடியாத்தம் அருகே கொட்டமிட்டா ஓட்டு சாவடியில் மழையால் மின் தடை ஏற்பட்டது. இதனால் தற்காலிக விளக்கு வசதி செய்யப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு பிறகு பெரும்பாலான ஒட்டுச் சாவடிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. மக்கள் நெருக்கமாக நின்று கொண்டு ஓட்டு போட குவிந்தனர்.

பொன்னை புதுார் ஒட்டுச் சாவடியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. மக்கள் நெருக்கமாக நின்று கொண்டு ஓட்டு போட குவிந்தனர்.பொன்னை புதுார் ஒட்டுச் சாவடியில் சமூக இடைவெளியே கடைக்கும்படி போலீசார் கூறியதால் வாக்கு வாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.அதன் பிறகு ஓட்டு பதிவு முடியும் வரை சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை. போலீசாரும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X