25 ஆண்டுக்கு பின் அமெரிக்க பணக்காரர் பட்டியலிலிருந்து டிரம்ப் வெளியேற்றம்

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக அமெரிக்காவின் பணக்காரர் வரிசையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பெயர் இடம் பெறாமல் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை உலக புகழ் பெற்றது. இது உலக பணக்காரரர்கள் பட்டியல் முதல் அமெரிக்க கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

வாஷிங்டன்: கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக அமெரிக்காவின் பணக்காரர் வரிசையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பெயர் இடம் பெறாமல் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலை வெளியிட்டுள்ளது.latest tamil newsஅமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை உலக புகழ் பெற்றது. இது உலக பணக்காரரர்கள் பட்டியல் முதல் அமெரிக்க கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இதில் குறைந்த பட்சம் 400 அமெரிக்க கோடீஸ்வரர்கள் இடம் பெறுவது வழக்கம்.

அமெரிக்காவில் ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டி பறந்தவர் டிரம்ப் இதனால் அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் ஆண்டுதோறும் தவறாது இடம் பிடித்து வந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இதனை அடுத்து கடந்த 2016 ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து வந்த கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டிரம்ப்பின் ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர் அளவிற்கு சரிந்தது. மேலும் டிரம்ப்பின் பெயர் 339 இடத்திற்கு தள்ளப்பட்டது.


latest tamil news


தொடர்ந்து இந்தாண்டுக்கான போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெறுவதற்கான தகுதியை அவர் பெறவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது பெயர் 25 ஆண்டுகளில் முதன் முறையாக இடம் பெறாமல் பணக்காரர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
07-அக்-202104:07:17 IST Report Abuse
ஏகன் ஆதன் டிரம்ப் எங்க ஊர் கவுன்சிலரிடம் ட்யூசன் எடுக்க வேண்டும் . ஆட்சியை பிடித்தால் மட்டும் போதாது , பணம் பண்ணவும் தெரிய வேண்டும் . அதை விட முக்கியம் வாரிசுகள் மூலமாக கட்சியை கைப்பற்றி கொள்ள தெரிந்து இருக்க வேண்டும் . ஊடகத்தை கையில் வைத்து கொண்டு வாரிசு ஆகா ஓகோ என்று கட்டுரைகள் வெளியிட்டு மக்கள் மனதிலும் இடம் பிடிக்க தெரிய வேண்டும்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
07-அக்-202100:29:08 IST Report Abuse
Mohan DON'T WORRY. 4 வருஷத்தில் இங்கிருந்து ஒருவரை அனுப்பிவைக்கிறோம்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
06-அக்-202121:42:15 IST Report Abuse
elakkumanan எங்க ஊரில் பாருங்க... ஒரு முறை கவுன்சிலர் ஆனா கூட பல நூறு கொடிகளை அள்ளிக்குவிக்கும் அளவுக்கு திராவிட வளர்ச்சி.. எதிர் கட்சியா, மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் பத்து வருசமாக இல்லாத கட்சியின் தேர்தல் செலவு (சும்மா தேர்தல் கமிஷன் சந்தோஷத்துக்காக கொடுத்த ரசீது ...அவ்ளோதான்) நூற்றி பதினைந்து கொடிகள்... யாராவது கேக்க முடியுமா? அதுதான் சனநாயகம்... திராவிடம் என்றால் சும்மாவா... ஊருக்காக இலவசமா டிவி கொடுக்கும் கட்சி.. நூறு ரூவாய் கேபிள் டிவி இலவசமா (கொரநா காலத்தில் ஒன்னு ரெண்டு மாசத்துக்கு) கொடுக்க முடியாத அளவுக்கு ஏழை கம்பெனிகள்... ஏழை கட்சிகள்.. கூடி திருட சம்மதித்தால் இருபத்தைந்து கொடிகள்.. திராவிடம் ...இது அல்லவோ வளர்ச்சி. கடன் அஞ்சறை லச்சம் கொடிகள் இருந்தாலும் அரசு காசில் நாற்பது கோடிக்கு சிலை வைக்கணும்னா ...திராவிடம் தி கிரேட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X