25 ஆண்டுக்கு பின் அமெரிக்க பணக்காரர் பட்டியலிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் | Dinamalar

25 ஆண்டுக்கு பின் அமெரிக்க பணக்காரர் பட்டியலிலிருந்து டிரம்ப் வெளியேற்றம்

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (7)
Share
வாஷிங்டன்: கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக அமெரிக்காவின் பணக்காரர் வரிசையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பெயர் இடம் பெறாமல் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை உலக புகழ் பெற்றது. இது உலக பணக்காரரர்கள் பட்டியல் முதல் அமெரிக்க கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

வாஷிங்டன்: கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக அமெரிக்காவின் பணக்காரர் வரிசையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பெயர் இடம் பெறாமல் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலை வெளியிட்டுள்ளது.



latest tamil news



அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை உலக புகழ் பெற்றது. இது உலக பணக்காரரர்கள் பட்டியல் முதல் அமெரிக்க கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இதில் குறைந்த பட்சம் 400 அமெரிக்க கோடீஸ்வரர்கள் இடம் பெறுவது வழக்கம்.

அமெரிக்காவில் ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டி பறந்தவர் டிரம்ப் இதனால் அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் ஆண்டுதோறும் தவறாது இடம் பிடித்து வந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இதனை அடுத்து கடந்த 2016 ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து வந்த கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டிரம்ப்பின் ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர் அளவிற்கு சரிந்தது. மேலும் டிரம்ப்பின் பெயர் 339 இடத்திற்கு தள்ளப்பட்டது.


latest tamil news


தொடர்ந்து இந்தாண்டுக்கான போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெறுவதற்கான தகுதியை அவர் பெறவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது பெயர் 25 ஆண்டுகளில் முதன் முறையாக இடம் பெறாமல் பணக்காரர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X