சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : அக் 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., வெற்றி பெற்றால் தான், உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரும் என்பதை விளக்க வேண்டும். இந்த உள்ளாட்சி தேர்தல் மற்ற கட்சிகளை விட நமக்கு மிகவும் முக்கியம்.'டவுட்' தனபாலு: ஏற்கனவே, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினரும், ஏன் தி.மு.க.,வினரும் கூட, 'உள்ளாட்சி தேர்தலுக்கு பின், பா.ம.க., அணி மாறும்' என்கின்றனர். அதை உண்மை என சொல்வது போல, 'இந்த

'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., வெற்றி பெற்றால் தான், உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரும் என்பதை விளக்க வேண்டும். இந்த உள்ளாட்சி தேர்தல் மற்ற கட்சிகளை விட நமக்கு மிகவும் முக்கியம்.

'டவுட்' தனபாலு: ஏற்கனவே, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினரும், ஏன் தி.மு.க.,வினரும் கூட, 'உள்ளாட்சி தேர்தலுக்கு பின், பா.ம.க., அணி மாறும்' என்கின்றனர். அதை உண்மை என சொல்வது போல, 'இந்த தேர்தல் நமக்கு மிகவும் முக்கியம்' என்கிறீர்களோ என்ற, 'டவுட்' தமிழக மக்களுக்கு வந்திருக்கும்!


பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்:
'நீட்' தேர்வு சுப்ரீம் கோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. எனவே, தமிழக மாணவர்களை ஏமாற்றாமல், யதார்த்தத்தை மக்களிடம் தி.மு.க., அரசு சொல்ல வேண்டும்.

'டவுட்' தனபாலு: ஆட்சிக்கு வருவதற்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது, 'ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே நீட் தேர்வுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்படும்' என, தி.மு.க., முன்னணியினர் பிரசாரம் செய்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின், சட்டசபையில் வெறுமனே தீர்மானம் மட்டும் நிறைவேற்றி உள்ளனர். எனவே, தி.மு.க.,வை மக்கள் நம்பினரா, இல்லையா என்பது, வரும் 12ல் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் போது, 'டவுட்' இன்றி தெரிந்து விடும்!


நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
: உ.பி.,யில் நடந்த எட்டு பேர் படுகொலை, ஒட்டுமொத்த நாட்டையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. பா.ஜ., அரசிடமிருந்து நாட்டை மீட்க, மற்றொரு சுதந்திர போராட்டத்தை ஜனநாயக வழியில் நடத்த, நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டும்.

'டவுட்' தனபாலு: பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சரின் மகன் செய்ததாக கூறப்படும் ஒரு விஷயத்திற்கு, பா.ஜ., எப்படி பொறுப்பேற்க முடியும்... நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒரு பழ வியாபாரி விற்ற பழம் அழுகி இருந்தால், 'நாம் தமிழர் விற்ற பழம் அழுகி போனது' என்பரா... பா.ஜ., என்றில்லை, எந்த கட்சியாக இருந்தாலும் இப்படி கூறக் கூடாது. இதுபோன்ற பேச்சுகள் தான் மக்களை மூளைச் சலவை செய்வதாகின்றன. அதை நன்கு அறிந்தும் பயன்படுத்துகிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-அக்-202115:06:09 IST Report Abuse
D.Ambujavalli ‘நீட் சாயம்’ வெளுத்து’ நாலு மாசம் ஆகிவிட்டது மக்கள் அந்த வாக்குறுதியையெல்லாம் நம்பி ஒன்றும் ஓட்டுப்பொடவில்லை மாணவர்களோ, பெற்றோர்களோ அவர்கள் வழியில் தயார் செய்வதும் எழுதுவதும் சகஜமாகிவிட்டது
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
07-அக்-202109:44:39 IST Report Abuse
Arul Narayanan உள்ளாட்சி தேர்தல் இடைத் தேர்தலில் எல்லாம் ஆளுங் கட்சி தான் வெற்றி பெறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X