போலி சான்று கொடுத்து எஸ்.ஐ., பயிற்சிக்கு சேர்ந்த ராஜஸ்தான் பெண் பணி நீக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி சான்று கொடுத்து எஸ்.ஐ., பயிற்சிக்கு சேர்ந்த ராஜஸ்தான் பெண் பணி நீக்கம்

Added : அக் 06, 2021
Share
அரக்கோணம்:அரக்கோணம் அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படை மையத்தில் போலி சான்று கொடுத்து எஸ்.ஐ., பயிற்சிக்கு சேர்ந்த ராஜஸ்தான் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டார்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு பல மாநிலங்களில் தேர்வு செய்யப்படும் போலீஸ், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.

அரக்கோணம்:அரக்கோணம் அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படை மையத்தில் போலி சான்று கொடுத்து எஸ்.ஐ., பயிற்சிக்கு சேர்ந்த ராஜஸ்தான் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு பல மாநிலங்களில் தேர்வு செய்யப்படும் போலீஸ், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். ராஜஸ்தான் மாநிலம், கம்மவான் பகுதியை சேர்ந்த காமோஷ் ராவுத், 22, என்ற பெண் எஸ்.ஐ., யாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் காண்பித்து கடந்த ஜூலை மாதம் 10 ம் தேதி இங்கு பயிற்சியில் சேர்ந்தார்.

அவரது சான்றிதழை சம்மந்தப்பட்ட மாநிலத்திற்கு அனுப்பி சரி பார்த்தில், இருப்பிடம், மதிப்பெண் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து காமோஷ்ராவுத் பணி நீக்கம் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மைய அதிகாரி சீனிமோல் உத்தரவிட்டார்.இது குறித்து புகார்படி தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய இன்று சென்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார். தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X