சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

முக்கிய பதவியை பிடிக்க முட்டி மோதும் அதிகாரி!

Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
முக்கிய பதவியை பிடிக்க முட்டி மோதும் அதிகாரி!''வருகை பதிவேட்டுல தில்லுமுல்லு நடக்குதுன்னு சொல்றாங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''பொதுப்பணித் துறையில 10 வருஷத்துக்கும் மேல, ஒப்பந்த அடிப்படையில வேலை பார்த்த 3,407 தினக்கூலி பணியாளர்களுக்கு, 2019 டிசம்பர்ல இருந்து, அரசு சார்புல நேரடியா

 டீ கடை பெஞ்ச்


முக்கிய பதவியை பிடிக்க முட்டி மோதும் அதிகாரி!



''வருகை பதிவேட்டுல தில்லுமுல்லு நடக்குதுன்னு சொல்றாங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''பொதுப்பணித் துறையில 10 வருஷத்துக்கும் மேல, ஒப்பந்த அடிப்படையில வேலை பார்த்த 3,407 தினக்கூலி பணியாளர்களுக்கு, 2019 டிசம்பர்ல இருந்து, அரசு சார்புல நேரடியா தினக்கூலி குடுத்துடுறாங்க... அவங்க வேலைக்கு வந்த நாட்களை கணக்கிட்டு, கூலியைத் தருவாங்க பா...

''ஆனா சில அலுவலகங்கள்ல, தினக்கூலி பணியாளர்கள் விடுப்பே எடுக்காம பணிக்கு வந்ததா பதிவேடுகள்ல குறிப்பிட்டிருக்காங்க... 'வருஷம் முழுக்க, யாராவது லீவு எடுக்காம பணிக்கு வர முடியுமா'ன்னு அதிகாரிகள் சிலர் கேள்வி எழுப்பியிருக்காங்க... 'இது சம்பந்தமா விசாரணை நடத்துனா, பெரிய முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும்'னு, துறை வட்டாரத்துல சொல்றாங்க பா...''
என்றார் அன்வர்பாய்.

''புறாக்களை திருடிட்டு போனது பத்தி புகாரே தரலை வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னையை அடுத்து வண்டலுார்ல உயிரியல் பூங்கா இருக்குல்லா... இங்க 2,382 விலங்குகள் இருக்கு வே... இதுல, வனச் சரகம் எண் ஒண்ணுல பறவைகள் கூண்டு பகுதி இருக்கு...

''இங்க, பஞ்சவர்ணக் கிளி, ஜாவா குருவி, புள்ளி புறா, காட்டுக் கோழி, 'லவ் பேர்ட்ஸ்'னு பல அரிய வகை பறவைகளை பராமரிச்சிட்டு இருக்காவ வே...

''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இந்த கூண்டுக்கு மூணு பேர் கத்தியோட வந்திருக்காவ... அவங்க, புள்ளி புறா மற்றும் காட்டுக் கோழி கூண்டுகளின் பூட்டை உடைச்சு, மூணு புறா, ஒரு காட்டுக் கோழியை திருடிட்டு போயிட்டாவ வே...

''தகவலை கேள்விப்பட்ட அதிகாரி ஒருத்தர், வனக் காப்பாளர்கள் மற்றும் ஊழியர்களிடம், 'இந்த விஷயத்தை வெளியே யாராவது சொன்னா, தொலைச்சு போடுவேன்'னு மிரட்டி வச்சுட்டாராம்... இதனால, புறா திருட்டை 'கப்'புன்னு அமுக்கிட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''நம்ம குமார், இவ்வளவு கோபமா எங்க போறார்...'' என தெருவைப் பார்த்து முணுமுணுத்த குப்பண்ணாவே, ''முக்கிய பதவிக்கு வர முட்டி மோதிண்டு இருக்கார் ஓய்...'' என, விஷயத்திற்கு வந்தார்.

''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் உயர் அதிகாரியா இருந்தவர் மேல, போன ஆட்சியில பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன... அவர் மேல லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செஞ்சிருக்கா ஓய்...

''ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவரது அட்டகாசங்களை எல்லாம், சங்க ஊழியர்கள், புதிய அமைச்சரிடம் எடுத்து சொல்லியிருக்கா... உஷாரான அமைச்சர், அதிகாரியின் பதவி உயர்வு கோப்புல கையெழுத்து போடலை ஓய்...

''அதோட, அதிகாரியை கட்டாய காத்திருப்புல வச்சுட்டார்... ஆனாலும், மனம் தளராத அதிகாரி, அமைச்சரின் சொந்த பந்தங்களை பார்த்து, பெரிய தொகையை கையில வச்சுண்டு, முக்கிய பதவியை பிடிக்க முயற்சி பண்ணிண்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.

''சந்திரசேகர் கட்சி ஆரம்பிச்சா, அதுல யாரெல்லாம் சேர்வாங்க பா...'' என அன்வர்பாய் கேட்க, அரட்டை திசை மாறியது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-அக்-202115:13:32 IST Report Abuse
D.Ambujavalli இப்படி ஒன்று விட்ட உறவுகள், அவர் இவர் மூலம் லஞ்சம் வாங்கினால் பெரிய இடமும் மாட்டாது இது மிகப் பெரிய இடத்து அந்தப்புரத்திலிருந்தே ஆரம்பமாகி விட்டதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X