பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 06, 2021
Share
Advertisement
அக்., 7, 1938மயிலாடுதுறை அருகே உள்ள, திருஇந்தளூரில், 1938 அக்., 7ம் தேதி பிறந்தவர் அரங்கநாதன். திருமூலரின் 'திருமந்திரம்' ஏற்படுத்திய தாக்கத்தால் 'ஞானக்கூத்தன்' எனும் புனைப்பெயர் சூட்டிக் கொண்டார்.1968 ௮ல் இருந்து முதன்முதலாக கவிதைகள் எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து பல்வேறு சிற்றிதழ்களில் கவிதைகள் எழுத துவங்கினார்.தமிழறிஞர்களுடன் இணைந்து, 'கசடதபற' இதழைத் துவக்கினார். 'ழ,

இதே நாளில் அன்று

அக்., 7, 1938

மயிலாடுதுறை அருகே உள்ள, திருஇந்தளூரில், 1938 அக்., 7ம் தேதி பிறந்தவர் அரங்கநாதன். திருமூலரின் 'திருமந்திரம்' ஏற்படுத்திய தாக்கத்தால் 'ஞானக்கூத்தன்' எனும் புனைப்பெயர் சூட்டிக் கொண்டார்.1968 ௮ல் இருந்து முதன்முதலாக கவிதைகள் எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து பல்வேறு சிற்றிதழ்களில் கவிதைகள் எழுத துவங்கினார்.
தமிழறிஞர்களுடன் இணைந்து, 'கசடதபற' இதழைத் துவக்கினார். 'ழ, கவனம்' ஆகிய இதழ்களிலும் பணியாற்றி உள்ளார். 'அன்று வேறு கிழமை' என்ற அவரின் முதல் கவிதை தொகுப்பே பெரும் வரவேற்பை பெற்றது.'சூரியனுக்கு பின்பக்கம், கடற்கரையில் சில மரங்கள்' உட்பட பல நுால்கள் எழுதியுள்ளார். நவீன தமிழ் இலக்கியத்தின் கவிஞராக போற்றப்படுகிறார். 'விளக்கு, சாரல், விஷ்ணுபுரம்' உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார்.
சென்னையில், உடல் நலக் குறைவால் 2016 ஜூலை 27ம் தேதி தன் 77வது வயதில் காலமானார்.கவிஞர் ஞானக்கூத்தன் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X