சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மானபங்கம் செய்ய முயற்சி 8 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021
Share
Advertisement
ஆத்தூர்:ஆத்தூர் அருகே குடும்ப தகராறில் வீட்டில் இருந்த பொருட்களை எடுக்க முயன்ற 8 பேரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, பைத்தூர் கிராமத்தை சேர்ந்த மாதேஸ்வரி, 48, மற்றும் அவரது அண்ணன் மனைவி லதா, 50, என்பவருக்கும் வீடு, நிலம் தொடர்பாக குடும்பத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.இன்று, மாதேஸ்வரி மற்றும் அவருடன் வந்த 10 பேர், அண்ணி லதா வீட்டிற்குச் சென்று
 பெண் மானபங்கம் செய்ய முயற்சி  8 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

ஆத்தூர்:ஆத்தூர் அருகே குடும்ப தகராறில் வீட்டில் இருந்த பொருட்களை எடுக்க முயன்ற 8 பேரை, போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, பைத்தூர் கிராமத்தை சேர்ந்த மாதேஸ்வரி, 48, மற்றும் அவரது அண்ணன் மனைவி லதா, 50, என்பவருக்கும் வீடு, நிலம் தொடர்பாக குடும்பத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று, மாதேஸ்வரி மற்றும் அவருடன் வந்த 10 பேர், அண்ணி லதா வீட்டிற்குச் சென்று பிரச்சனையில் ஈடுபட்டு வீட்டின் உள்ளிருந்து பொருட்களை எடுத்துச் சென்று வண்டியில் ஏற்ற முயன்றனர். லதா கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி ஆத்தூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்று, வீட்டில் இருந்த 14 பவுன் நகை, பணம் கொள்ளையடித்தும், மேலாடைகளை கிழித்து மானபங்கம் செய்ய முயன்றதாக, கூலித்தொழிலாளி லதா அளித்த புகாரின் அடிப்படையில், மாதேஸ்வரி, கணவர் ராஜேந்திரன் மற்று அடியாட்கள் உள்பட 9 பேர் மீது, பெண் வன்கொடுமை உள்பட 7 பிரிவுகளில், ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில், மாதேஸ்வரி, 48 பார்த்திபன், 30, கார்த்திகேயன், 32, பழனிசாமி, 26, வினோத்குமார், 25, பாண்டியன், 23, ஆல்பர்ட், 25, விக்னேஷ், 23, ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.இவர்களிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகன ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X