தடை செய்யப்பட்ட பட்டாசுகள் தாராள விற்பனை: கோர்ட் ஆவேசம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுடில்லி:'பசுமை பட்டாசுகள் என்ற பெயரில், தடை செய்யப்பட்ட பொருள்களில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் தாராளமாக விற்கப்படுவதை ஏற்க முடியாது. 'ஒலி, புகை மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கான தடையை அனைத்து மாநிலங்களுக்கும் உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடுமையுடன் கூறியுள்ளது.பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை, நீதிபதிகள்

புதுடில்லி:'பசுமை பட்டாசுகள் என்ற பெயரில், தடை செய்யப்பட்ட பொருள்களில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் தாராளமாக விற்கப்படுவதை ஏற்க முடியாது. 'ஒலி, புகை மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கான தடையை அனைத்து மாநிலங்களுக்கும் உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடுமையுடன் கூறியுள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ். போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.


பல கட்டுப்பாடுகள்

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமர்வுகூறியுள்ளதாவது:பட்டாசுகள் தயாரிப்பதற்கு மற்றும் வெடிப்ப தற்கு பல கட்டுப்பாடு களை விதித்து இந்த நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை.குறிப்பாக, பட்டாசுகளில் பேரியம் உப்பு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பட்டாசுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பொருளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், பசுமை பட்டாசு என்ற பெயரில் தாராளமாக விற்கப்படுகின்றன.தாங்கள் இந்த பேரியம் உப்பை வாங்கி கிடங்கில் வைத்துள்ளதாகவும், பட்டாசுகளில் பயன்படுத்தவில்லை என்றும் பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வெறும் காட்சிக்காக பேரியம் உப்பை வாங்கி கிடங்கில் வைத்துள்ளீர்களா.

இந்த நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படுவது குறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ.,யின் சென்னை மண்டலம் அளித்துள்ள அறிக்கையில், உத்தரவுகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கனவே நாங்கள் கூறியபடி, ஒரு சில லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக, நாட்டு மக்களின் உயிருடன் வாழும் உரிமையை மீற முடியுமா.

பண்டிகைக்கோ, கொண்டாட்டத்துக்கோ நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பசுமை பட்டாசுகள் தயாரித்திருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால், நீதிமன்றம் தடை விதித்த பிறகும், அதை அப்பட்ட மாக மீறுவதை எப்படி ஏற்க முடியும்.சி.பி.ஐ., அறிக்கை குறித்து அனைத்து தரப்பினரும் தங்களுடைய பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.வழக்கின் விசாரணை, அக்., 26க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


அக்., 22க்கு ஒத்தி வைப்பு

இதற்கிடையே, டில்லி யில் பட்டாசுகள் விற்பனை, வெடிப்பதற்கு தடை விதித்து மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.இதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு வந்தன.அப்போது, 'பட்டாசுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன் உத்தரவுகளின் அடிப்படையில் இதில் முடிவெடுக்கப்படும்' என, உயர் நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.வழக்கின் விசாரணை, அக்., 22க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X