பொது செய்தி

இந்தியா

ஜிம் கார்ப்பெட் பூங்கா பெயர் மாறுகிறது

Added : அக் 06, 2021
Share
Advertisement
உத்தரகண்ட்:உத்தரகண்டில் உள்ள புலிகள் சரணாலயமான ஜிம் கார்ப்பெட் தேசிய பூங்கா, ராம்கங்கா தேசிய பூங்கா என விரைவில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உத்தரகண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜிம் கார்ப்பெட் தேசிய பூங்கா கடந்த 1936ல் உருவாக்கப்பட்டது. மொத்தம் 520 சதுர கி.மீ., பரப்பளவில் மலைகள், நதிகள், சதுப்பு நிலங்கள் என பரந்து

உத்தரகண்ட்:உத்தரகண்டில் உள்ள புலிகள் சரணாலயமான ஜிம் கார்ப்பெட் தேசிய பூங்கா, ராம்கங்கா தேசிய பூங்கா என விரைவில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜிம் கார்ப்பெட் தேசிய பூங்கா கடந்த 1936ல் உருவாக்கப்பட்டது. மொத்தம் 520 சதுர கி.மீ., பரப்பளவில் மலைகள், நதிகள், சதுப்பு நிலங்கள் என பரந்து விரிந்து அமைந்துள்ளது. கடந்த 1973ல் இருந்து புலிகள் பாதுகாப்பு இயக்கம் துவங்கப்பட்டு, மிகப் பெரிய புலிகள் சரணாலயமாக உருவெடுத்தது.

மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அஸ்வனி குமார் சவுபே, இந்த பூங்காவுக்கு சமீபத்தில் வருகை தந்தார்.அப்போது, ஜிம் கார்ப்பெட் பூங்காவின் பெயர், ராம்கங்கா தேசிய பூங்கா என விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த தகவலை, பூங்காவின் இயக்குனர் உறுதி செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X