சில வரி செய்திகள்...: இந்தியா

Added : அக் 06, 2021
Share
Advertisement
ரூ.15 கோடி 'ஹெராயின்' பறிமுதல்மும்பை: சமீபத்தில் மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, கோவாவுக்கு புறப்பட்ட சொகுசு கப்பலில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில், அங்கு போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதில், நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த

ரூ.15 கோடி 'ஹெராயின்' பறிமுதல்

மும்பை: சமீபத்தில் மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, கோவாவுக்கு புறப்பட்ட சொகுசு கப்பலில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில், அங்கு போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதில், நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மும்பையில் நேற்று போலீசார் நடத்திய சோதனையில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 'ஹெராயின்' பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

சூரத்: குஜராத்தில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், சூரத் நகரில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும், அதாவது 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசியின் முதல் 'டோஸ்' செலுத்தப் பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் 48.4 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்து: 4 போலீசார் பலி

குவாலியர்: மத்திய பிரதேசத்தின் மோரேனா மாவட்டத்தில் உள்ள ஆக்ரா - மும்பை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை ஐந்து போலீசார் காரில் பயணித்தனர். அப்போது எதிரில் வந்த லாரி மீது அந்த கார் வேகமாக மோதியது.இந்த விபத்தில் காரில் இருந்த மூன்று போலீசாரும், அதன் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு காவலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் முறையீடு

புதுடில்லி: மேற்கு வங்கத்தில், நிலக்கரி ஊழல் வழக்கில் பண மோசடி செய்ததாக, திரிணமுல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜி மீது, அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், இதை விசாரிக்க முடிவு செய்துள்ள நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், தனக்கு 'சம்மன்' பிறப்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டில்லி உயர் நீதிமன்றத்தில் ருஜிரா முறையிட்டுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சிலிண்டர் வெடிப்பு: 3 பேர் பலி

புதுடில்லி: டில்லியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில், நேற்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில், அந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பெண் ஒருவர் தன் 2 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, உயிரிழந்தோரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X