இம்மாத இறுதியில் காங்., தலைவர் தேர்வு?

Updated : அக் 08, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி:உட்கட்சி பூசல்கள் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இம்மாத இறுதியில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது.சமீபகாலமாக, காங்., கட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. பஞ்சாப், கோவா உட்பட பல மாநிலங்களில் மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி,
இம்மாத இறுதி,  காங்., தலைவர் தேர்வு?

புதுடில்லி:உட்கட்சி பூசல்கள் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இம்மாத இறுதியில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது.

சமீபகாலமாக, காங்., கட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. பஞ்சாப், கோவா உட்பட பல மாநிலங்களில் மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி, வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே, குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் ௨௩ பேர், 'ஜி23' என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே காங்., கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசலுக்கு தீர்வு காணவும், கட்சியை மறுகட்டமைப்பு செய்யவும் உடனடியாக காரியக் கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என, காங்., மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி இம்மாத இறுதியில் கூடுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. அதில், பல்வேறு மாநிலங்களில் நிலவும் உட்கட்சி பூசல்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
07-அக்-202123:23:20 IST Report Abuse
Mohan என்ன, விரைவில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கூட்டமா. கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கு.
Rate this:
Cancel
enkeyem - sathy,இந்தியா
07-அக்-202120:28:10 IST Report Abuse
enkeyem இந்த மாத இறுதியில் என்றால் எந்த வருடம் இந்த மாதம்? 2030?, 2130?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-அக்-202117:32:18 IST Report Abuse
sankaseshan நம்மவூரு ஜோதிமணி அக்கா சிறந்த தேர்வாக இருக்கும் காங்கிரசை ஒரு வழி பண்ணிடுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X