சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோழி வளர்ப்பு மோசடி குற்றவாளிக்கு '10 ஆண்டு'

Added : அக் 06, 2021
Share
Advertisement
கோவை:நாட்டுக் கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில், அதன் பங்குதாரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சரளையில் பாஸ்கரன், 37; சேகர், 40; குமார், 49, ஆகியோர், 'பாஸ் பவுல்ட்ரி பார்ம்ஸ்' என்ற பெயரில் நாட்டுக் கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.இதில், 1 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்வோருக்கு, மாதம் 8,000
 கோழி வளர்ப்பு மோசடி குற்றவாளிக்கு '10 ஆண்டு'

கோவை:நாட்டுக் கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில், அதன் பங்குதாரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சரளையில் பாஸ்கரன், 37; சேகர், 40; குமார், 49, ஆகியோர், 'பாஸ் பவுல்ட்ரி பார்ம்ஸ்' என்ற பெயரில் நாட்டுக் கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.இதில், 1 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்வோருக்கு, மாதம் 8,000 ரூபாய் வட்டி, வருட போனஸ் 8,000 ரூபாய் தருவதாக விளம்பரப்படுத்தினர். ஆனால், 98 பேருக்கு பணத்தை திருப்பி தராமல், 1.40 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.

ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, 2013 ஜூன் 11ல் மூவரையும் கைது செய்து, கோவை டான்பிட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப் பட்டது. சேகருக்கு 10 ஆண்டுகள் சிறை, 76 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். குமார் விடுதலை செய்யப்பட்டார். ஜாமினில் சென்ற பாஸ்கரன் தலைமறைவாக இருப்பதால், அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X