பொது செய்தி

தமிழ்நாடு

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற முதல்வர் ஸ்டாலின் மனைவி

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
திருச்சி:தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்க்கா, இன்று, பாதயாத்திரையாக சமயபுரம் சென்று வேண்டுதலை நிறைவேற்றினார்.தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரச்சாரம் செய்த போது, திருச்சி வந்த அவரது மனைவி துர்க்கா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், வெக் காளியம்மன் கோவில்களில், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுதல் வைத்தார்.அவரது வேண்டுதல் படி

திருச்சி:தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்க்கா, இன்று, பாதயாத்திரையாக சமயபுரம் சென்று வேண்டுதலை நிறைவேற்றினார்.



latest tamil news


தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரச்சாரம் செய்த போது, திருச்சி வந்த அவரது மனைவி துர்க்கா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், வெக் காளியம்மன் கோவில்களில், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுதல் வைத்தார்.அவரது வேண்டுதல் படி தி.மு.க., வெற்றி பெற்று,ஸ்டாலின் முதல்வராகி உள்ளார்.அதனால், பிரார்த்தனையை நிறைவேற்று வதற்காக, இன்று மதியம் திருச்சி வந்த துர்க்கா, திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார்.

இன்று மாலை 5 மணி அளவில், வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக,ஹோட்டலில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்ட துர்க்கா, சுமார் 7 கி.மீ., துாரம் நடந்து சென்று, இரவு 7:00 மணிக்கு, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.


latest tamil news


தொடர்ந்து, இரவு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.நாளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலும், வெக்காளியம்மன் கோவிலிலும் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandian - Boston,யூ.எஸ்.ஏ
13-அக்-202118:24:12 IST Report Abuse
Pandian கணவன் குடும்பத்துக்கு அடங்காத பெண்மணி , சிரிப்புக்கு
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-அக்-202116:45:31 IST Report Abuse
Vijay D Ratnam ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராக துர்கா ஸ்டாலின் அவர்களை நியமிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
07-அக்-202123:45:54 IST Report Abuse
Unmai Vilambi இந்த அம்மாக்கு வருஷம் முழுதும் லீவுதான் கொண்டாட்டம் தான் நம்மள மாதிரி பாமரனுக்கு கிடைக்கறது ஞாயிறு ஒருநாள் லீவு - அதுலயும் கோவில் குளம் னு போகலாம் னு பாத்தா மண்ணு இப்படி பக்தர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொண்டாள் இவர்களுக்கு எப்படி கடவுள் அருள் புரிவார்? மக்களின் சாபம் தான் மிஞ்சும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X