கை நிறைய வருமானம் ஈட்டலாம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கை நிறைய வருமானம் ஈட்டலாம்!

Added : அக் 06, 2021
Share
நெல் சாகுபடியுடன் மீன் வளர்ப்பு தொழிலையும் செய்து வரும், தஞ்சாவூர் மாவட்டம் பூவத்துார் கிராமத்தைச் சேர்ந்த பூவண்ணன்: பத்தாம் வகுப்பு வரை படித்த நான், விவசாயம் செய்ய கற்று, முழு நேர விவசாயியாக மாறினேன். எங்கள் ஊரில் சிலர் மீன் வளர்த்து விற்பனை செய்வதை பார்த்து, நானும் மீன் வளர்ப்பில் இறங்கினேன். மற்றவர்களை போல் இல்லாமல், இயற்கை முறையில் உணவு கொடுத்து மீன்களை வளர்க்க
சொல்கிறார்கள்

நெல் சாகுபடியுடன் மீன் வளர்ப்பு தொழிலையும் செய்து வரும், தஞ்சாவூர் மாவட்டம் பூவத்துார் கிராமத்தைச் சேர்ந்த பூவண்ணன்: பத்தாம் வகுப்பு வரை படித்த நான், விவசாயம் செய்ய கற்று, முழு நேர விவசாயியாக மாறினேன். எங்கள் ஊரில் சிலர் மீன் வளர்த்து விற்பனை செய்வதை பார்த்து, நானும் மீன் வளர்ப்பில் இறங்கினேன். மற்றவர்களை போல் இல்லாமல், இயற்கை முறையில் உணவு கொடுத்து மீன்களை வளர்க்க தீர்மானித்தேன்.

அரை ஏக்கர் அளவுக்கு குளம் வெட்டினேன். அடிப்பகுதியில் சுண்ணாம்பும், அதற்கு மேல் மாட்டுச்சாண கரைசலையும் விட்டு, தண்ணீர் நிரப்பினேன். கெண்டை மீன் ரகமான ரோகு, மிர்கால், கட்லா ரகங்களில் 800 மீன் குஞ்சுகள் வாங்கி விட்டேன். ஆறு மாதம் கழித்து மொத்தமாகவே, 70 கிலோ தான் கிடைத்தது. 1 கிலோ மீன் 180 ரூபாய்க்கு விற்றேன். குளம் வெட்டியது, மீன் குஞ்சு, தீவனம் எல்லாம் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் நஷ்டமானது. இதையடுத்து, ஏற்கனவே மீன் வளர்ப்பில் அனுபவம் உள்ள வர்களை சந்தித்து ஆலோசனை பெற்றேன்.

இந்த முறை பாம்பு, பூச்சி வராமல் இருக்க குளத்தின் கரையை சுற்றியும், பறவைகளால் பிரச்னை வராமல் இருக்க, மேல் பகுதியிலும் வலை அமைத்தேன். ரோகு, மிர்கால், புல்கெண்டை என, 3,000 ரக மீன்களை குளத்தில் விட்டேன்.கடலைப் பிண்ணாக்கு, கோதுமை, அரிசி தவிடைத் தீவனமாக கொடுத்தேன். வாரம் ஒருமுறை முட்டைக்கோஸ் இலைகளை கொடுப்பேன். 30 நாட்களுக்கு ஒருமுறை மீன் வளர்ச்சியை பார்ப்பேன். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மஞ்சள் துாள் கலந்த நீரையும், தண்ணீர் கெடாமல் சுத்தமாக இருக்க, இரண்டு மூட்டை கல் உப்பையும் கொட்டினேன்.

ஆறு மாதம் கழித்து மீன்கள் விற்பனைக்கு தயாரானது.நான், இயற்கை முறையில் மீன் வளர்ப்பது தெரிந்து, ஊரில் உள்ளவர்கள் நேரடியாகவே வந்து வாங்கி செல்கின்றனர். வியாபாரிகளுக்குக் கொடுக்காமல் நேரடியாக நானே விற்பனை செய்கிறேன். மீன் சுவையாக இருந்ததாக, வாங்கியவர்கள் கூறினர். 1 கிலோ 220 ரூபாய் என, 750 கிலோ மீன் விற்பனை செய்ததில், 1.65 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.மீன் குஞ்சு, தீவனம், வலை வாடகை 52 ஆயிரம் ரூபாய் போக, 1.13 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது. முதல் தடவை நஷ்டத்தை ஏற்படுத்திய மீன் வளர்ப்பு, பின் கை நிறைய வருமானத்தை கொடுத்தது.தொடர்புக்கு: 95004 08665

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X