திஹார் சிறை அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' 'யுனிடெக்' வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 06, 2021
Share
Advertisement
புதுடில்லி:சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'யுனிடெக்' நிறுவன அதிபர்கள் சஞ்சய் மற்றும் அஜய் சந்திரா, சிறையில் இருந்து வர்த்தகத்தில் ஈடுபட உதவிய திஹார் சிறை அதிகாரிகளை 'சஸ்பெண்ட்' செய்யவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.'யுனிடெக்' ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர்கள் சஞ்சய் மற்றும் அஜய் சந்திரா ஆகியோர், பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை

புதுடில்லி:சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'யுனிடெக்' நிறுவன அதிபர்கள் சஞ்சய் மற்றும் அஜய் சந்திரா, சிறையில் இருந்து வர்த்தகத்தில் ஈடுபட உதவிய திஹார் சிறை அதிகாரிகளை 'சஸ்பெண்ட்' செய்யவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

'யுனிடெக்' ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர்கள் சஞ்சய் மற்றும் அஜய் சந்திரா ஆகியோர், பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, 2017ல் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் இருந்தபடியே வர்த்தகங்களை கவனித்து வருவதாக, அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

இதையடுத்து சஞ்சய் மற்றும் அஜய் சந்திராவை, மஹாராஷ்டிராவின் தலோஜா மற்றும் மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறைகளுக்கு மாற்ற கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.இந்த விவகாரத்தில் திஹார் சிறை அதிகாரிகளின் நடத்தை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, டில்லி கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, 'சீல்' இடப்பட்ட உறையில் தன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை சார்பிலும் நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இதன் அடிப்படையில், யுனிடெக் நிறுவன அதிபர்களுடன் கூட்டு சேர்ந்து, அவர்களுக்கு உதவிய திஹார் சிறை அதிகாரிகளை, சஸ்பெண்ட் செய்து நீதிமன்றம் உத்தர விட்டது.மேலும், அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை 21க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X