டி.ஆர்.டி.ஓ., உளவு விவகாரம் பாக்., தொடர்பு அம்பலம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
புவனேஷ்வர்:ஒடிசாவில் உள்ள டி.ஆர்.டி.ஓ., பரிசோதனை மையத்தை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவு பார்த்ததாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.ஒடிசாவில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நம் முப்படைகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்படுகின்றன.இந்த பரிசோதனை மையம், 'ஆன்லைன்'

புவனேஷ்வர்:ஒடிசாவில் உள்ள டி.ஆர்.டி.ஓ., பரிசோதனை மையத்தை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவு பார்த்ததாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.

ஒடிசாவில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நம் முப்படைகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்படுகின்றன.இந்த பரிசோதனை மையம், 'ஆன்லைன்' வாயிலாக உளவு பார்க்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, கடந்த மாதம் ஐந்து அதிகாரிகள் கைதாகினர்.

அவர்களிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். பின், அவர்களிடம் குற்றப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.இது குறித்து, ஒடிசா குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சீவ் பாண்டா கூறியதாவது:பாக்.,கை சேர்ந்த பெண் ஒருவர், இந்த ஐந்து அதிகாரிகளிடமும் வெவ்வேறு பெயர்களில், 'பேஸ்புக்' வாயிலாக நட்பாகி உள்ளார்.

அந்த பெண்ணின் பேஸ்புக் கணக்கு பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டுள்ளது.ஆனால் அவர், இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனியில் இருந்து பேசுவதைப் போல, தொழில்நுட்ப மோசடி செய்து உள்ளார். டி.ஆர்.டி.ஓ.,வில் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகள் குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ளார்.இதில் சில கணக்குகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. அதில், மேலும் பலருடன் அவர் உரையாடி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X