பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசிக்கு பின் காய்ச்சல் நல்லது: பொது சுகாதார இயக்குனர் விளக்கம்

Updated : அக் 08, 2021 | Added : அக் 06, 2021
Share
Advertisement
சென்னை:''கொரோனா தடுப்பூசி செலுத்திய பின், காய்ச்சல் வருவது நல்லது. எனவே, இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்துள்ள 20 லட்சம் பேரும், மெகா முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசும், நான்கு மெகா தடுப்பூசி
தடுப்பூசி,பின் காய்ச்சல் நல்லது: பொது சுகாதார இயக்குனர் விளக்கம்

சென்னை:''கொரோனா தடுப்பூசி செலுத்திய பின், காய்ச்சல் வருவது நல்லது. எனவே, இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்துள்ள 20 லட்சம் பேரும், மெகா முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசும், நான்கு மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி உள்ளது. இதில் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.ஐந்தாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம், வரும் 10ம் தேதி 30 ஆயிரம் மையங்களில் நடக்க உள்ளது. அன்றைய தினம் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த, தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்து, தடுப்பூசி செலுத்தாதவர்களின் விபரங்களை சேகரித்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த, பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:கொரோனா தடுப்பூசியை இரண்டு தவணைகள் போட்டால் மட்டுமே, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். ஒரு தவணை மட்டும் போட்டால், அவை உருமாறக்கூடிய கொரோனா வைரசிற்கு எதிராக செயல்படாது.எனவே, பொதுமக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான், கொரோனா வைரசிற்கு எதிராக நல்ல பலன் கிடைக்கும். தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், தீவிர நோய் பாதிப்பு, உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்க முடியும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான், தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, காய்ச்சல், தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது நல்லது. அப்போது தான் தடுப்பூசி, அந்த உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது என்று எடுத்து கொள்ள முடியும்.ஒரு சிலரின் உடல் நிலைக்கு ஏற்ப, உடல் உபாதைகள் ஏற்படாது. எனவே, முதல் தடுப்பூசியில் உடல் உபாதைகள் ஏற்பட்டு விட்டது என்பதற்காக, இரண்டாம் தவணை தடுப்பூசி போட மக்கள் தயங்க வேண்டாம்.

தமிழகத்தில் 4.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தி உள்ளோம். அதில், இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும் 20 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். அவர்களின் விபரங்களை சேகரிக்க, அந்தந்த மாவட்ட சுகாதார அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மெகா முகாமில், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X