பொது செய்தி

இந்தியா

பழம்பெரும் நடிகர் திரிவேதி காலமானார்

Added : அக் 06, 2021
Share
Advertisement
மும்பை:பழம்பெரும் குஜராத்தி நடிகர் அரவிந்த் திரிவேதி, நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். இவருக்கு வயது 82.கடந்த 1980ம் ஆண்டுகளில் குஜராத்தி மொழி திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வலம் வந்தவர் அரவிந்த் திரிவேதி. இரங்கல்கடந்த 1986ம் ஆண்டு ஒளிபரப்பான பிரபல ராமாயணம் 'டிவி' தொடரில், ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த இவர், அனைவரின் கவனத்தையும்
 பழம்பெரும் நடிகர் திரிவேதி காலமானார்

மும்பை:பழம்பெரும் குஜராத்தி நடிகர் அரவிந்த் திரிவேதி, நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். இவருக்கு வயது 82.

கடந்த 1980ம் ஆண்டுகளில் குஜராத்தி மொழி திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வலம் வந்தவர் அரவிந்த் திரிவேதி. இரங்கல்கடந்த 1986ம் ஆண்டு ஒளிபரப்பான பிரபல ராமாயணம் 'டிவி' தொடரில், ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த இவர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.பின், 1991ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், குஜராத்தின் சபர்கந்தா தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, லோக் சபா எம்.பி.,யாக தேர்வான இவர், 1996 வரை அப்பதவியில் நீடித்தார்.

இந்நிலையில், மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசித்து வந்த திரிவேதி, நேற்று முன் தினம் இரவு 10:30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். 82 வயதான இவர், நீண்ட நாட்களாக உடல்நலக் கோளாறால் அவதியுற்று வந்துள்ளார். திரிவேதியின் மறைவு செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிப்படுத்தினர்.இதையடுத்து, அரவிந்த் திரிவேதியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தகனம்திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் ஆகியோரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையே திரிவேதியின் உடல், மும்பையின் கண்டிவலி பகுதியில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X