சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்தவர் கைது

Added : அக் 06, 2021
Share
Advertisement
சாயல்குடி : குடிபோதையில் நடந்த சண்டையில் மூதாட்டியை அடித்து மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். சிக்கல் அருகே பி.கீரந்தையை சேர்ந்தவர் வைரவ பாண்டி 30. கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர் சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தை சேர்ந்த உறவினரின் மகளான வில்வகாளீஸ்வரிஎன்பவரை கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். 4 மாதத்திற்கு முன்பு

சாயல்குடி : குடிபோதையில் நடந்த சண்டையில் மூதாட்டியை அடித்து மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

சிக்கல் அருகே பி.கீரந்தையை சேர்ந்தவர் வைரவ பாண்டி 30. கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர் சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தை சேர்ந்த உறவினரின் மகளான வில்வகாளீஸ்வரிஎன்பவரை கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். 4 மாதத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து விட்டு திரும்பி வந்துள்ளார்.மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் குடிபோதையில் இருந்த வைரவ பாண்டிக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது அங்கு வந்த மூதாட்டி நாகக்கனி 70 மற்றும் உறவினர்கள் சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.

ஆத்திரமடைந்த வைரவபாண்டி, மூதாட்டியின் வயிற்றில் மிதித்ததில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் காயம் ஏற்பட்டு சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பலனின்றிமூதாட்டி உயிரிழந்தார்.சாயல்குடி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வைரவபாண்டியை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X