மாட்டு இறைச்சிக்கு விலை நிர்ணயம் பஞ்சாயத்து முடிவால் கேரளாவில் சர்ச்சை

Added : அக் 06, 2021
Share
Advertisement
கோட்டயம்:கேரளாவின் கோட்டயத்தில், மாட்டு இறைச்சிக் கான அதிகபட்ச விலையை, மாவட்ட பஞ்சாயத்து நிர்ணயம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் ஆடு, கோழி, மீன் இறைச்சிகளை போலவே மாட்டு இறைச்சி உண்பவர்கள் அதிகம். எனவே இங்கு மாட்டு இறைச்சி அதிகம் விற்பனையாவதோடு, விலையும் உயர்ந்து

கோட்டயம்:கேரளாவின் கோட்டயத்தில், மாட்டு இறைச்சிக் கான அதிகபட்ச விலையை, மாவட்ட பஞ்சாயத்து நிர்ணயம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் ஆடு, கோழி, மீன் இறைச்சிகளை போலவே மாட்டு இறைச்சி உண்பவர்கள் அதிகம். எனவே இங்கு மாட்டு இறைச்சி அதிகம் விற்பனையாவதோடு, விலையும் உயர்ந்து வருகிறது. தற்போது 1கிலோ மாட்டு இறைச்சி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இது, மாநிலம் முழுதும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

'மாட்டு இறைச்சி விலை உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில், மாட்டு இறைச்சி விலையை கிலோ 320 ரூபாய் என நிர்ணயித்து, கோட்டயத்தின் மஞ்சூர் கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதையடுத்து, 'மாட்டு இறைச்சியை கிலோ 320 ரூபாய்க்கு மேல் உயர்த்தக் கூடாது' என, அந்த பஞ்சாயத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து, பஞ்சாயத்து தலைவர் நிர்மலா ஜிம்மி கூறியதாவது:இந்த விலை நிர்ணயம் குறித்து அனைத்து கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவாதித்து, அங்கும் இந்த விலை நிர்ணயத்தை அமல்படுத்துமாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முடிவுக்கு மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.''மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை அரசு தீர்த்து வைத்தால், கிலோவுக்கு 50 ரூபாய் வரை விலை குறைப்பு செய்ய முடியும். அதற்கு மேல் முடியாது,'' என, மாட்டு இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் சலீம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X