பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி விழா கோயில்கள் திறக்கப்படுமா

Added : அக் 06, 2021
Share
Advertisement
திருவெற்றியூர் : நவராத்திரி விழா துவங்கியதால் கோயில்களை திறக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாடானை பகுதியில் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் நவராத்திரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் விரதமிருந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். நவராத்திரி விழா இன்று (அக்.7) துவங்கி 15 வரை

திருவெற்றியூர் : நவராத்திரி விழா துவங்கியதால் கோயில்களை திறக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவாடானை பகுதியில் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் நவராத்திரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் விரதமிருந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். நவராத்திரி விழா இன்று (அக்.7) துவங்கி 15 வரை நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கால் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு அன்று கோயில்கள்மூடப்பட்டிருக்கும். இதனால் கோயிலுக்கு செல்ல முடியாததால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து திருவெற்றியூர் பக்தர்கள் கூறியதாவது: நவராத்திரி விழா அன்று பாகம்பிரியாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்படும். 3 நாட்கள் மூடப்பட்டிருப்பதால் கோயிலுக்கு செல்ல முடியாது. ஆகவே கோயிலை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X