பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகள் மீது புகார் தரலாம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் வயதான பெற்றோர்களை கவனிக்காமல், பராமரிப்புதொகை வழங்காத பிள்ளைகள் மீது, சட்டப்படி புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர்(பொ)காமாட்சி கணேசன் கூறினார்.ராமநாதபுரம் மாவட்ட சமூகநலத்துறை சார்பில், உலக முதியோர் தினவிழா நடந்தது. சமூகநல அலுவலர் (பொ) ஜெயந்தி வரவேற்றார். இதில், கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்துார், பார்த்திபனுார்

ராமநாதபுரம் : மாவட்டத்தில் வயதான பெற்றோர்களை கவனிக்காமல், பராமரிப்புதொகை வழங்காத பிள்ளைகள் மீது, சட்டப்படி புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர்(பொ)காமாட்சி கணேசன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட சமூகநலத்துறை சார்பில், உலக முதியோர் தினவிழா நடந்தது. சமூகநல அலுவலர் (பொ) ஜெயந்தி வரவேற்றார். இதில், கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்துார், பார்த்திபனுார் பகுதிகளில் முதியோர் காப்பகம் உள்ளன. இங்கு உணவு, ஆடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகள் குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இதுமாதிரி 122 மனுக்கள்பெறப்பட்டு ராமநாதபுரத்தில் 42, பரமக்குடியில் 22 மனு தீர்வு காணப்பட்டுஉள்ளது.

5 பேருக்கு பராமரிப்பு தொகை பெற்றுதரப்பட்டுள்ளது. முதியவர்கள் புகார் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 14567 என்ற இலவச தொலைபேசி எண்ணில் முதியவர்கள்புகார் அளிக்கலாம்,'என்றார்.

முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், சென்னை மாநில களப்பொறுப்பாளர் உமாமகேஸ்வரி, சுகாதாரப்பணிகள் மாவட்ட பயிற்சி மைய மருத்துவர் விசாலாட்சி, முதியவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X