பொது செய்தி

தமிழ்நாடு

இயந்திரம் பழுதால் கொசு மருந்து தெளிப்பு பணிகள் பாதிப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் கொசுமருந்து தெளிப்பு இயந்திரங்கள் பழுதாகியுள்ளதால் அப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு கஷாயம் வழங்குதலும் நிறுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.ராமநாதபுரம் நகராட்சியில் 50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு மேல் உள்ளன. பாதாளசாக்கடை சரிவர பராமரிக்காமல் உள்ளது, மழைநீர் செல்ல வழியின்றியும் ரோட்டில்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் கொசுமருந்து தெளிப்பு இயந்திரங்கள் பழுதாகியுள்ளதால் அப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு கஷாயம் வழங்குதலும் நிறுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் நகராட்சியில் 50 ஆயிரம் குடியிருப்புகளுக்கு மேல் உள்ளன. பாதாளசாக்கடை சரிவர பராமரிக்காமல் உள்ளது, மழைநீர் செல்ல வழியின்றியும் ரோட்டில் தேங்குகிறது. தற்போது மழை பெய்துவருவதால்கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இரவு மட்டுமின்றி பகலில் கொசுக்கடியால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மலேரியா, டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

இந்தநிலையில் நகராட்சியில் 6 தெளிப்பான் இயந்திரங்களில் 4 பழுதாகியுள்ளதால் கொசு மருந்து அடிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கபசுர குடிநீரும்வழங்குவது இல்லை. இயந்திர பழுதை செப்பனிட்டு கொசுமருந்து தெளிக்கவும், கபசுர குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நகர சுகாதார அலுவலர் ஸ்டான்லிகுமார் கூறுகையில், பழுதான கொசுமருந்து தெளிப்பான்களை பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 60 களப்பணியாளர்கள் மூலம் பிளீச்சிங் பவுடர் தெளித்தும், தண்ணீர் தொட்டியில் 'அபேட்' மருந்து ஊற்றப்படுகிறது. டெங்கு பாதிப்பு இல்லை,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X