கடந்தாண்டு அறுவடை பாதிப்பு; இந்தாண்டு விதைப்பில் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடந்தாண்டு அறுவடை பாதிப்பு; இந்தாண்டு விதைப்பில் பாதிப்பு

Added : அக் 06, 2021
Share
திருவாடானை : திருவாடானையில் பெய்த பலத்த மழையால் வயல்களில் தண்ணீர்தேங்கி விவசாயம் பாதிக்கபட்டுள்ளது.திருவாடானை தாலுகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது இத் தாலுகாவில் விவசாய பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.பெரும்பாலான கிராமங்களில் விதைக்கப்பட்ட நிலையில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால்

திருவாடானை : திருவாடானையில் பெய்த பலத்த மழையால் வயல்களில் தண்ணீர்தேங்கி விவசாயம் பாதிக்கபட்டுள்ளது.

திருவாடானை தாலுகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது இத் தாலுகாவில் விவசாய பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.பெரும்பாலான கிராமங்களில் விதைக்கப்பட்ட நிலையில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விதைத்தும் பயனில்லாமல் போனது.

இதுகுறித்து வெள்ளையபுரம் விவசாயிகள் கூறியதாவது:கடந்தாண்டு பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடையின் போது நெல்கதிர்கள்மூழ்கியது. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டு விதைக்கும் போதே மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X