பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கட்டட உறுதித் தன்மை ஆய்விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 06, 2021
Share
Advertisement
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே திணைக்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு புதிய கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது குறித்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை 2018ல் தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு நேற்று விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு,'கட்டடத்தில்

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே திணைக்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு புதிய கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது குறித்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை 2018ல் தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு நேற்று விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு,'கட்டடத்தில் விரிசல்கள் சரி செய்யப்பட்டுள்ளன. கட்டடம் பயன்பாட்டில் உள்ளது,' என அறிக்கை தாக்கல் செய்தது. உயர்நீதிமன்ற தரப்பு வழக்கறிஞர் முகம்மதுமுகைதீன் ஆய்வு செய்து, 'கட்டடத்தின் உறுதித்தன்மை சரியாக இல்லை,' என போட்டோ ஆதாரங்களுடன் தாக்கல் செய்தார்.நீதிபதிகள்: அரசுத் தரப்பில் மீண்டும் ஆய்வு செய்து தற்போதைய நிலை குறித்து அக்.,21ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X