பொது செய்தி

தமிழ்நாடு

மகாளய அமாவாசை வழிபாடு: பக்தர்களை விரட்டிய போலீஸ்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் பகுதி கோயில்களில் சிறப்பு அபிேஷக, வழிபாடு நடந்தது.சேதுக்கரை கடல்பகுதியில் வழிபட்ட பக்தர்களை போலீசார் விரட்டினர்.ஆண்டுதோறும் புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையன்று முன்னோர்களை நினைத்து நீர்நிலைகளில் வழிபடுவது வழக்கமாகும். இவ்வாண்டு கொரோனா பரவல் காரணமாக ராமேஸ்வரம், தேவிபட்டினம், சேதுக்கரை உள்ளிட்ட

ராமநாதபுரம் : புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் பகுதி கோயில்களில் சிறப்பு அபிேஷக, வழிபாடு நடந்தது.

சேதுக்கரை கடல்பகுதியில் வழிபட்ட பக்தர்களை போலீசார் விரட்டினர்.ஆண்டுதோறும் புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையன்று முன்னோர்களை நினைத்து நீர்நிலைகளில் வழிபடுவது வழக்கமாகும். இவ்வாண்டு கொரோனா பரவல் காரணமாக ராமேஸ்வரம், தேவிபட்டினம், சேதுக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் நீராட, தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சேதுக்கரை கடலோரத்தில் தடையை மீறி தர்ப்பணம் செய்தவர்களை போலீசார் விரட்டினர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் சிவன் கோயில், வழிவிடுமுருகன் கோயில், குமரய்யாகோயில், வினைதீர்க்கும் வேலவர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X